பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (10.06.2018)

மீண்டும் வேலைநிறுத்த போராட்டம்

தபால் ஊழியர் பிரச்­சி­னைக்கு உட­னடித் தீர்வைப் பெற்­றுத்­த­ர­வேண்டும் என்று கோரி நாடு தழு­விய ரீதியில் நாளை 11 ஆம் திகதி முதல் தொடர்­வேலை நிறுத்­தத்தை மேற்­கொள்­ள­வுள்­ளனர். 22 ஒன்­றி­ணைந்த தபால் தொழிற்­சங்க முன்­ன­ணிகள் இணைந்து இப்­போ­ராட்­டத்தை முன்­னெ­டுக்­க­வுள்­ளதாக தெரிவிக்கப்படுகிறது இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஊழி­யர்­களின் உரி­மை­களை மீளப்­பெற்­றுக்­கொள்­வ­தற்­காக சுமார் 12 வரு­டங்கள் கடும் முயற்சி மேற்­கொண்ட போதிலும் எந்தப் பதிலும் இன்றி உள்ளோம். இப்பிரச்­சி­னைகள் தொடர்பில் 2006ஆம் வரு­டத்தில் இருந்து கலந்­து­ரை­யா­டல்கள், மாநா­டுகள், போராட்­டங்­களில் ஈடு­பட்­ட­போதும் இது­வ­ரையும் எந்­தப்­பி­ரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு எட்­டப்­ப­ட­வில்லை.

மேற்­படி இலக்கை நிறை­வேற்று­வ­தற்­காக நாளை 11ஆம் திகதி பி.ப. 4 மணி முதல் தொடர் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் மீனவர்கள் இருவர் மாயம்: தேடும் பணிகள் தீவிரம்

கடந்த வியாழக்கிழமை அதிகாலையில் தலைமன்னார் கடற்கரையில் இருந்து நண்டு வலை பயன்படுத்தி ஒரு பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற கிறிஸ்டின், எமல்டா ஆகிய இரண்டு மீனவர்கள் கரை திரும்பாததால் மன்னார் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் மீனவர்களின் உறவினர்கள் மனு அளித்தனர்.

மீன் வளத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மூலம் மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தில் தீவிர தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையிடையே இன்று அதிகாலை அரிச்சல்முனை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தனுஷ்கோடி மீனவர்களிடம் தலைமன்னார் மீனவர்கள் காணாமல் போன மீனவர்களை விசாரித்தாக தனுஷ்கோடி மீனவர்கள் மெரைன் போலிஸாரிடம் தகவல் வழங்கியுள்ளனர்.

கூட்டமைப்பு முக்கிய கலந்துரையாடல்

வடக்கு மாகா­ணத்தில் இடம்­பெற்று வரும் சிங்­களக் குடி­யேற்றம் தொடர்­பாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது முக்­கிய கலந்­து­ரை­யாடல் ஒன்றை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக தெரியவருகின்றது.

குறிப்­பாக முல்­லை­தீவு மாவட்­டத்தில் மகா­வலி திட்­டத்தின் j வலயம், k வலயம், l வலயம் போன்­ற­வற்றின் கீழ் பாரிய சிங்­களக் குடி­யேற்றம் இடம்­பெற்று வரு­கின்­றது. இவ்­வா­றான நிலையில் இது தொடர்­பாக வடக்கு மாகாண சபை­யிலும் விவா­திக்­கப்­பட்­டி­ருந்­தது.

இது தொடர்பில் எதிர்­வரும் 19 ஆம் திகதி காலை கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது கூட்­ட­மொன்றை ஏற்­பாடு செய்­துள்­ள­தாக அறிய முடி­கின்­றது. இக் கூட்­டத்தின் போது முல்­லைத்­தீவு வவு­னியா போன்ற இடங்­களில் இடம்­பெற்று வரும் குடி­யேற்­றங்கள் தொடர்­பான தர­வு­களைக் கொண்டு அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக முடிவெடுக்கப்படவுள்ளது.

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு

மலையகத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் கொத்மலை மின்சார சபைக்கு நீரேந்தும் பகுதியில் ஆற்று நீரின் மட்டம் உயர்வடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதனால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று இன்று (10) காலை திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதுடன் ஒரு சில நீர்தேக்கங்களின் நீர் மட்டம் கனிசமான அளவு உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக கெனியன், லக்ஷபான, விமலசுரேந்திர, மவுஸ்ஸாக்கலை, காசல்ரீ ஆகிய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment