பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (10.06.2018)

மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி

வெல்லவாய, குடாஓய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெலுல்ல பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் காண்ஸ்டபள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 5 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் தனது கடமைகளை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெல்லவாய, வெஹரயாய பகுதியை சேர்ந்த 40 வயதுடைய தனமல்வில பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் காண்ஸ்டபள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் குடாஓய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹெரோய்ன் போதைப் பொருளுடன் கைது

கிரபத்கொடை – வெடிகந்த பிரதேசத்தில் ஹெரோய்னுடன் பெண்ணொருவர் உட்பட மூவர், கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடமிருந்து 6 கிராம் 900 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த நபர்கள் நீண்ட நாட்களாக, ஹெரோய்ன் விநியோகத்தில் ஈடுபட்டு வருவதாகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து ​தெரியவந்துள்ளது.

சில பிரதேசங்களில் மின்சாரத்தடை

லக்ஷபான மற்றும் பலாங்கொடை மின்சார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மின்சார கோளாறு காரணமாக, சில பிரதேசங்களில் நேற்றிரவு முதல் (09), ​​தொடர்ந்தும் மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளது.

இதன்படி காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, அம்பலங்கொடை, தெனியாய, இரத்தினபுரி மற்றும் எம்பிலிபிட்டிய ஆகிய பிரதேசங்களில் தொடர்ந்தும் மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எம்பிலிபிட்டியவில் இன்புளுவென்சாவுக்கு அறிகுறிகள்

தெற்கு பகுதியில் இன்புளுவன்சா தொற்று ஏற்படுவதற்காக நோயாளிகளிடம் தென்பட்ட சில அறிகுறிகள், எம்பிலிபிட்டியவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று, எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

20 தொடக்கம் 30 நோயாளர்களிடம் இந்த அறிகுறி காணப்படுவதாகவும் கடந்த சில வாரங்களாக, இந்த அறிகுறிகள் தென்படும் நோயாளர்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று எவரும் கண்டறியப்படவில்லை. நிலைமை கட்டுப்பாட்டுக்குள்ளேயே உள்ளது. எனினும், இன்புளுவன்சா நோய்க்கான சில அறிகுறிகள், எம்பிலிபிட்டிய பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எம்பிலிபிட்டியவில் ஏற்பட்ட இந்த நோய் தொற்றால் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் தெற்கு பகுதியில் ஏற்பட்ட இந்த இன்புளுவன்சா, மேலும் பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுவதாகவும் கூறினார்.

Comments (0)
Add Comment