பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (12.06.2018)

இன்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் விலை குறைகிறது

இன்று (12) நள்ளிரவு முதல் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலையை 70 ரூபாவாக குறைக்க தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் விஜித விஜயமுனி சொய்சா கூறுகிறார்.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை இன்று அமைச்சரவைக்கு தாக்கல் செய்வதாக அமைச்சர் கூறுகிறார்.

அதன்படி 101 ரூபாவாக இருக்கின்ற ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலை 31 ரூபாவால் குறைக்கப்படுகிறது.

இந்த விலைக்குறைப்புக்கு மீனவ சங்கங்கள் உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (11) மாலை மீனவ சங்க பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் விஜித விஜயமுனி சொய்சாவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கை மருத்துவ நிபுணர்கள் பேரவை, சேவை புறக்கணிப்பை மேற்கொள்ள போவதாக அறிவித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் 18ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு தனியார் மருத்துவ சேவையில் ஈடுபடுவதில்லை என பேரவையின் தலைவர் சுனில் விஜேசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

மருத்துவர்களிடம் அறவிடப்படும் 24 சதவீத வரியை 12 சதவீதத்தால் குறைக்குமாறு அந்த பேரவை கோரியுள்ளது.

அவ்வாறு, வரி குறைக்கப்படாவிடின் இந்த சேவை புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என பேரவை இலங்கை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாதாள உலக குழுக்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

நாட்டில் தலைதூக்கியுள்ள பாதாள உலக குழுக்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் பாதாள உலக குழுக்களை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கரந்தெனிய பிரதேசத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த ராஜபக்‌ஷ இதனைக் கூறியுள்ளார்.

பிரதேச சபை தவிசாளர் மற்றும் எதிர்கட்சி தலைவர் வைத்தியசாலையில் அனுமதி

கம்பளை, உடபலாத பிரதேச சபையில் இன்று (12) காலை பதற்ற நிலமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதன்போது கண்ணாடி போத்தல் ஒன்று தலையில் பட்டதால் பிரதேச சபையின் தவிசாளர் காயங்களுக்கு உள்ளாகி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பதற்ற நிலமையின் போது பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Comments (0)
Add Comment