பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (14.06.2018)

இலங்கை கிரிக்கட்டின் தேர்தலை நடத்த நீதிமன்றம் அனுமதி

இலங்கை கிரிக்கட்டின் தேர்தலை நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக கடந்த 31ம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த இலங்கை கிரிக்கட்டின் தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், புதிதாக தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு தெரிவித்ததையடுத்து தேர்தலுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது.

பாலித ரங்கே பண்டாரவின் மகனுக்கு பிணை

இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டாரவை பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிலாபம் நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதுடன் அவருடைய சாரதி அனுமதி பத்திரத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 06 ஆம் திகதி, அதிகாலை யசோத ரங்கே பண்டார பயணித்த கெப் வாகனம், சிலாபம் – புத்தளம் வீதியில் பங்கதெனிய, கொட்டபிட்டிய சந்தியில் உள்ள வீடொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

மதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆரச்சிகட்டுவ பொலிஸாரால் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment