பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (15.06.2018)

20வது அரசியலமைப்பு திருத்தம் மூலம் மஹிந்தவுக்கே அதிக நன்மை

20வது அரசியலமைப்பு திருத்தம் மூலம் மிகவும் நன்மை கிடைப்பது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க கூறினார்.

நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

தற்போது இருக்கின்ற அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதி பதவி வெற்றிடமானால் பிரதமருக்கு ஜனாதிபதியாகும் சந்தர்ப்பம் இருப்பதாகவும், எனினும் மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமரானால் அவருக்கு ஜனாதிபதியாகும் வாய்ப்பு கிடைப்பதில்லை என்றும் அநுரகுமார திசாநாயக்க கூறினார்.

ஆனால் 20வது அரசியலமைப்பு திருத்தம் மூலம் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு பலமிக்க பிரதமராகும் வாய்ப்பு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

20வது அரசியலமைப்பு திருத்தத்தின் படி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அரசாங்கத்தில் இருந்து 07 மாத காலம் குறைவடையும் என்றும் அவர்

ஞானசாரருக்கு வழங்கிய தீர்ப்பால் திருப்தி

குடிமக்களின் கடமை சட்டத்தை வலுப்படுத்துவதாகவும் அந்த வகையில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை குறித்து தாம் திருப்தி அடைவதாக, சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.

காணாமலாக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா என்னெலிகொடவை, ஹோமாகம நீதிமன்றில் வைத்து அச்சுறுத்திய சம்பவம்​ தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று (14) வழங்கப்பட்டதன் பின்னரே சந்தியா எக்னெலிகொட இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கரந்தெனிய பிரதேச சபை உப தலைவர் கொலையின் பிரதான சந்தேகநபர் கைது

அண்மையில் கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், மீட்டியாகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெரகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல பாதாள உலக குழுத் தலைவரான கொஸ்கொட சுஜீவவுக்கு நெருக்கமான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் டொனால்ட் சம்பத் கடந்த 09ம் திகதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

அதேதினம் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தமை கூறத்தக்கது.

Comments (0)
Add Comment