பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (19.06.2018)

அரச நிறுவனங்களின் கணக்காய்வு அறிக்கைகள் மீதான விவாதம் இன்று

அரச நிறுவனங்களின் கணக்காய்வு அறிக்கைகள் சம்பந்தமாக இன்றைய தினம் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட உள்ளது.

837 அரச நிறுவனங்கள் உள்ளடங்கியதாக கனணி தொழில்நுட்ப கட்டமைப்பின் ஊடாக மதிப்பீட்டு நடவடிக்கை நிறைவு செய்யப்பட்ட அறிக்கைகள் இன்றைய தினம் பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட உள்ளதாக அரச கணக்குகள் சம்பந்தமான செயற்குழுவின் தலைவர் லசந்த அழகியவன்ன கூறினார்.

இன்றைய தினம் முழுவதும் இது சம்பந்தமான விவாதம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அபிவிருத்திக்கு பிரித்தானியாவின் ஒத்துழைப்பு

நட்டில் கிராம மட்டத்தில் பாலங்கள் மற்றும் வைத்தியசாலைகளை நிர்மாணிப்பதற்காக பிரித்தானியாவின் உதவியை பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிரித்தானியாவின் வர்த்தக கொள்கைகள் சம்பந்தமான இராஜாங்க அமைச்சர் கிரெக் ஹேண்ட்ஸை சந்தித்த போது இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

பிரதமர் அண்மையில் லண்டனுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது இதுகுறித்து பேசப்பட்டுள்ளது.

அதேவேளை கொழும்பு துறைமுக நகரத்தின் அபிவிருத்திக்காக அரச மற்றும் தனியார் இணைப்பை ஏற்படுத்துவதற்காக பிரித்தானியாவின் விஷேட அறுவுறுத்தல்களை வழங்குவது சம்பந்தமாகவும் பிரித்தானிய ராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்த விஜயத்தின் போது பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூனுடனும் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனு பிற்போடப்பட்டது

சிறைத்தண்டனை பெற்றுள்ள ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனு பிற்போடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 22ம் திகதி பிற்பகல் 02.00 மணி வரை அந்த மனு பிற்போடப்படுவதற்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று காலை அந்த மனு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் எவரும் நீதிமன்றில் ஆஜராகியிருக்காமையின் காரணமாகவே மனு பிற்போடப்பட்டுள்ளது.

திரைப்படங்களை விநியோகம் செய்யும் அதிகாரம் திரைப்பட கூட்டுத்தாபனத்திடம்

திரைப்படங்களை விநியோகம் செய்யும் அதிகாரத்தை தேசிய திபை்படக் கூட்டுத்தாபனம் வரையறை செய்துள்ளது.

அதன்படி தனியார் துறையினர் எந்தவொரு திரைப்படங்களையும் விநியோகம் செய்ய முடியாது என்று திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தலைவர் கூறியுள்ளார்.

எந்தவொரு திரைப்படங்களும் தேசிய திபை்படக் கூட்டுத்தாபனத்தின் ஊடாகவே விநியோகம் செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்

Comments (0)
Add Comment