பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (19.06.2018)

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகை, நீர்த்தாரை தாக்குதல்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பத்தரமுல்லை பகுதியில் பாராளுமன்ற சுற்றுவட்டத்துக்கு அருகில் போராட்டக்காரர்களை கலைப்பதற்காக இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து சய்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக புதிய சட்டம்

பாரிய அளவில் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக புதிய சட்டங்களை அமுல்படுத்த அரசு தீர்மானித்துள்ளதாக அரச நிர்வாகம், முகாமைத்துவ மற்றும் சட்டம், ஒழுங்கு தொடர்பான பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

இந்நாட்டில் இருந்து போதைப் பொருளை ஒழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குருணாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொரள்ளை பகுதியில் கடுமையான வாகன நெரிசல்

பொரள்ளை பிரதேசத்தில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டிருப்பதாக எமது செய்தியாளர் கூறுகின்றார்.

அப்பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்படுகின்ற சய்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாகவே வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment