பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (19.06.2018)

தேரர் மீதான துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மேலும் இருவர் கைது

கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 2 பேரை இன்று (17) கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கதிர்காமம் பிரதேசத்தில் வைத்து ஒருவரும் திக்வெல்ல பிரதேசத்தில் வைத்து பெண் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

விகாராதிபதி மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்கு உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனியார் மருத்தவ சேவைகள் சிலவற்றுக்கான வெட் வரி நீக்கம்

தனியார் வைத்தியசாலைகளில் வைத்திய சேவைகள் சிலவற்றுக்காக அறவிடப்படுகின்ற வெட் வரி நீக்கப்படுவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறினார்.

வைத்தியரின் கட்டணம், வைத்திய ஆலோசனை கட்டணம் மற்றும் சேவைக் கட்டணம், ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள வெட் வரி ஜூலை 01ம் திகதி முதல் நீக்கப்படுவதாக நிதியமைச்சு கூறியுள்ளது.

இதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் கூறினார்.

வௌிநோயாளர் பிரிவுக்கு அறவிடப்படுகின்ற வெட் வரி ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் இதன் போது கூறினார்.

எவ்வாறாயினும் தனியார் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெறும்போது அறவிடப்படுகின்ற அறைக்கட்டணம் மீதான வெட் வரி இருப்பது போன்றே அறவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பிரதமரின் அனுமதியுடனே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறினார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

இன்புளுவன்சா மருந்துகளில் பக்றீரியா: ‘ராஜித பதவி விலக வேண்டும்’

தென் மாகாணத்தில் பரவி வரும் இன்புளுவன்சா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பாகிஸ்தானிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள மருந்துப் பொருட்களில் பக்றீரியாக்கள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்தென, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆகவே இதற்கு பொறுப்பேற்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது அமைச்சுப் பதவியிலிருந்து விலகவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச வைத்தய அதிகாரிகள் சங்கத்தினால் கொழும்பில் ​ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (19) கலந்துக்கொண்டிருந்த அச்சங்கத்தின் செயலாளர் நவீன் டி சொய்சா இதனை ​தெரிவித்தார்.

2,000 புதிய பஸ்கள் சேவையில்

2,000 புதிய பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதுதொடர்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்தார்.

பொது மக்களுக்கு சிறப்பான போக்குவரத்துச் சேவையை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் நிதியை பயன்படுத்தாது அதற்கு தேவாயன நடவடிக்கையை மேற்கொள்வதே தமது நோக்கமாகும் எனவும் அவர் கூறினார்.

பஸ்களுக்கு 500 சி.சி இயந்திரங்களை (என்ஜின்) பொருத்தும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

விவசாய அமைச்சு இடமாற்றம்; ஆராய அறுவர் அடங்கிய குழு

விவசாய அமைச்சு, தற்போது இயங்கிவரும் கட்டடத்தில் இருந்து அதனை அகற்றி, அவ்வமைச்சை, முன்னர் இயங்கிவந்த பழைய இடத்துக்கே மாற்றுவது தொடர்பில் ஆராய, அமைச்சர் மஹிந்த அமரவீரவினால், அறுவர் அடங்கிய நிபுணத்துவ குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் தலைவராக, ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய உறுப்பினர்களாக, சிரேஸ்ட சட்டத்தரணிகளான ஜகத் விக்ரமநாயக்க, அசோக்க வீரசூரிய, முன்னாள் உதவி கணக்காய்வாளர் டீ.எல்.பீ.டயஸ், பொறியியலாளர் சந்தன எதிரிசூரிய, விவசாய அமைச்சின் சட்ட அதிகாரி, எல்.ஜீ.ஹெக்டர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விவசாய அமைச்சு தற்போது இயங்கிவரும் கட்டடமானது, குறித்த அமைச்சுக்கு எந்தவகையிலும் பொறுத்தமற்றதெனவும் வாடகையாக மாதம் ஒன்றுக்கு 21 மில்லியன் ரூபாய்க்கு அதிகமான தொகை செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கட்டடம், 5 வருடக் குத்தகைக்குப் பெறப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்படும் அதேவேளை, இதற்கென செலவிடப்பட்ட நிதி மற்றும் குத்தகை ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் காணப்படும் சட்டரீதியான செயற்பாடுகள் தொடர்பில் ஆராயவே, இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment