பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..!! (19.06.2018)

புதிய பிரதி அமைச்சராக புத்திக பத்திரன பதவியேற்பு

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தகத்துறை பிரதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

சற்று முன்னர் ஜனாதிபதி முன்னிலையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து அவர் இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

பிரதியமைச்சரானார் புத்திக பத்திரன

நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன வர்த்தக வாணிபத்துறை பிரதியமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.


ஆசிரியரை பழிதீர்த்த மாணவன்

ஆனமடு பகுதியில், பிரசித்திப் பெற்ற பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவரை மாணவன் ஒருவன் தாக்கிய சம்பவம் ஒன்று இன்று (19) பதிவாகியுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியர், ஆனமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலையில் தரம் 13 இல் தொழில்நுட்ப பாடம் நடத்திய ஆசிரியர், மாணவனின் வகுப்பறையில் நடந்துகொண்ட விதத்தை கண்டுத்துள்ளார். இதனையடுத்து வகுப்பை புறக்கணித்துவிட்டு வெளியில் வந்த மாணவன், சக மாணவர்களுடன் இணைந்து, ஆசிரியரை கீழே தள்ளி கடுமையாக தாக்கியுள்ளார்.

இந்நிலையில் மாணவனின் தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியரும், ஆசிரியரினால் தாக்கப்பட்ட மாணவனும் சிகிச்சைக்காக ஆனமடு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஆனமடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நோர்வே இராஜாங்க அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

நோர்வே இராஜாங்க வெளிவிவகார அமைச்சர் ஜென்ஸ் புரோலிக் ஹொல்ட் (Jens Frølich Holte) நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளைய தினம் (20) இலங்கை வரவுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் இந்த விஜயத்தின்போது, சிரேஷ்ட அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்தல், இருதரப்பு ஒத்துழைப்பு, சூழல் சவால்கள், மற்றும் கடல் சார் தொழிற்றுறைகளை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அவதானம் செலுத்துவார் என நோர்வே தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் தனது விஜயத்தின் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளதோடு, நோர்வே அரசாங்கத்தின் உதவியுடன் மீள்குடியேற்ற பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் நிலையான அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் வாழ்வாதார செயற்றிட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராயவுள்ளார்.

அதேவேளை, பளை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி பொதி செய்யும் நிலையத்தையும் இராஜாங்க அமைச்சர் திறந்துவைக்கவுள்ளார்.

Comments (0)
Add Comment