பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (20.06.2018)

தெற்கு அதிவேக வீதி மற்றும் மாத்தறை – கொழும்பு தனியார் பஸ்கள் பணி புறக்கணிப்பு

தெற்கு அதிவேக வீதியின் அனைத்து தனியார் பஸ்களும் மற்றும் மாத்தறை – கொழும்பு தனியார் பஸ்களும் இன்று காலை முதல் பணி புறக்கனிப்பில் ஈடுபட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.

நேற்று (19) அம்பலாங்கொட பிரதேசத்தில் தனியார் பஸ் சாரதி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் போக்குவரத்து ஆணைக்குழு தலைவரின் தன்னிச்சையான செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் இந்த பணிப்புறக்கனிப்பு நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று தாக்குதல் நடத்திய நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும், அவரை விரைவாக கைது செய்யுமாறும், போக்குவரத்து ஆணைக்குழு தலைவரின் கேள்விப்பத்திர முறைக்கு மாறான செயற்பாட்டை நிறுத்துமாறும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கோரிக்கைகளுக்கு நாளைய தினத்திற்குள் தீர்வு கிடைக்காவிட்டால் தொடர் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த புறக்கணிப்பு காரணமாக பொதுப் போக்குவரத்து பயணிகள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

நாட்டின் மீதான சர்வதேச நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது

தெளிவான வெளிநாட்டு கொள்கை இல்லாத காரணத்தால் நாட்டின் மீதான சர்வதேச நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

சில தூதரகங்களுக்கு இதுவரையில் தூதவர்கள் நியமிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கில் நீதிபதி கிஹான் குலதுங்கவை விலக்க உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இருந்து, கெழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்கவை விலக்கி வேறொரு நீதிபதி முன்னிலையில் விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குமுதினி விக்ரமசிங்க மற்றும் எஸ். துரைராஜா ஆகிய நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

மஹிந்தானந்த அளுத்கமகே அமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமாக பெறப்பட்ட 274 இலட்சம் ரூபா பணத்தைப் பயன்படுத்தி பொரள்ளை – கிங்சி வீதியில் வீடொன்றைக் கொள்வனவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, சட்டமா அதிபரால் கெழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கை கெழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரிக்காமல் வேறொரு நீதிபதி முன்னிலையில் விசாரிக்க உத்தரவிடுமாறு கோரி மஹிந்தானந்த அளுத்கமகே மேன்முறையீடு செய்திருந்தார்.

நீதிபதி கிஹான் குலதுங்க பக்கச்சார்பாக செயற்படுவதாக மனுதாரரான மஹிந்தானந்த அளுத்கமகே தனது மேன்முறையீட்டில் கூறியிருந்தார்.

தேரர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் அனைவருக்கும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 07 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜூலை மாதம் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.

கதிர்காமம், கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி கோபவக தம்மிந்த தேரர் உட்பட இரண்டு தேரர்கள் மீது கடந்த 13ம் திகதி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

Comments (0)
Add Comment