பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (22.06.2018)

துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி..!!

ஹிக்கடுவ, வெவல பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகம் அறிவித்துள்ளது.

மோட்டார் சைக்களில் வந்த இனந்தெரியாத இருவரினால் மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் போது 29 வயதுடைய ஆண்னொருவரே அவர்களின் துப்பாக்கி சூட்டுக்கிலக்காகி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாடு மீண்டும் சர்வாதிகாரத்தின் பாதையில் செல்ல அனுமதிக்க மாட்டேன்-சிறிசேன

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஹிட்லரை போல மாறி இலங்கையை அவரது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்த பிரபல மதகுருவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையாக சாடியுள்ளார்.

நான் பௌத்தமத துறவிகளை மதிக்கின்றேன் ஆனால் இந்த கருத்தை ஏற்க முடியாது என சிறிசேன தெரிவித்துள்ளார்.

தசாப்தகால இரும்புகர ஆட்சியை முடிவிற்கு கொண்டுவர எண்ணியதாலேயே 2015 இல் மக்கள் முன்னைய அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்தனர் என சிறிசேன தெரிவித்துள்ளார்.

மக்கள் தங்கள் தனிப்பட்ட சுதந்திரத்தை மீளப்பெற்றுக்கொள்வதற்காகவே வாக்களித்தனர் எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.

2015 ஜனவரியில் மக்கள் உணவிற்காகவும் வேலைவாய்ப்பிற்காகவும் வாக்களிக்கவில்லை அவர்கள் ஜனநாயகம் சுதந்திரத்திற்காக வாக்களித்தனர் என சிறிசேன தெரிவித்துள்ளார்.

நான் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் மீண்டும் ஜயந்த விக்­ர­ம­ரத்­ன­விடம் இன்று சி.ஐ.டி. விசா­ரணை
ஏற்படுத்திக்கொடுத்துள்ளேன் நாடு மீண்டும் சர்வாதிகாரத்தின் பாதையில் செல்வதற்கு அனுமதிக்க மாட்டேன் எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜயந்த விக்­ர­ம­ரத்­ன­விடம் இன்று சி.ஐ.டி. விசா­ரணை

சண்டே லீடர்” பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்க படுகொலை விவ­காரம் தொடர்பில் இடம்­பெறும் விசா­ர­ணை­களின் ஒரு அங்­க­மாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்­ர­ம­ரத்­னவை சி.ஐ.டி. இன்று விசா­ரணை செய்­ய­வுள்­ளது.

அதன்­படி முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்­ர­ம­ரத்­னவை இன்று முற்­பகல் குற்றப் புல­னாய்வுப் பிரிவில் ஆஜ­ரா­கு­மாறு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இன்று குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவில் ஆஜ­ராக அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்­ர­ம­ரத்­ன­விடம், லசந்த கொலையின் பின்னர் சாட்­சிகள் மாற்­றப்­பட்­டமை, லசந்­தவின் குறிப்புப் புத்­தகம் காணாமல் ஆக்­கப்­பட்­டமை தொடர்­பிலும் ஊட­க­வி­ய­லாளர் கீத் நொயார் கடத்தல், கொலை முயற்சி விவ­காரம் தொடர்­பிலும் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்ப­ட­வுள்­ள­தாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

ரஜரட்ட பல்கலைகழகம் காலவரையின்றி மூடப்பட்டது

ரஜரட்ட பல்கலைகழகம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைகழக மாணவர் குழு ஒன்று நேற்று (21) மாலை நிர்வாக கட்டடத்திற்குள் அத்துமீறி நுழைந்த அங்கு தங்கி இருக்க முற்பட்டதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பல்கலைகழக உபவேந்தர் பேராசிரியர் ரஞ்சித் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் பல்கலைக்கழக விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் இன்று (22) முற்பகல் 10.00 மணிக்கு முன்னர் விடுதியில் இருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் சிலருடைய வகுப்புத்தடை உட்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் மாணவர் சங்கத்துடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள உபவேந்தரிற்கு பதிலாக பதில் உபவேந்தர் வந்ததன் காரணமாக அங்கு மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share

Comments (0)
Add Comment