பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (23.06.2018)

தங்க பிஸ்கட்டுகளை கடத்தி சிரேஷ்ட குடிவரவு குடியகல்வு அதிகாரி கைது..!!

தங்க பிஸ்கட்டுகளை கடத்த முற்பட்டஜசிரேஷ்ட குடிவரவு குடியகல்வு அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 60 தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் கூறினார்.

கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்டுகளின் பெறுமதி சுமார் 37 மில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தினேஷ் சந்திமாலின் மேன் முறையீடு நிராகரிக்கப்பட்டது

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதிராக தினேஷ் சந்திமால் செய்த மேன்முறையீடு விசாரணை குழுவால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இதனைத் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அனைத்து நபர்களினதும் சுகாதார நிலமை கணினி மயப்படுத்தப்படும்

ஒரு நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்வி வளர்ச்சியடைந்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரிக்கும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

தற்போதை அரசாங்கத்தின் கீழ் சுகாதாரத் துறையின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.

நாட்டில் அனைத்து நபர்களினதும் சுகாதார நிலமை குறித்து கணினி மயப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் கூறினார்.

Comments (0)
Add Comment