பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (24.06.2018)

நாட்டில் சட்டம் கடுமையான முறையில் அமுல்படுத்தப்பட வேண்டும்

நாட்டில் சட்டம் கடுமையான முறையில் அமுல்படுத்தப்பட வேண்டும் என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எந்தவொரு அரசாங்கமும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குழுக்களை ஒழிப்பதற்கு அதிருப்தி தெரிவிப்பதில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வணக்கத்திற்குரிய அஸ்கிரய தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பல்வேறு ஊழல்கள் மறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

ஊழல் மோசடிகளை தடுப்பது தொடர்பான எதிர்பார்ப்புகள் இதுவரையில் நிறைவேறவில்லை என அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக தெரிவித்துள்ளார்.

மேலும் பல்வேறு ஊழல்கள் மறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கில் வீடுகளை நிர்மாணிக்கும் பொறுப்பு சீனாவிற்கு- இந்தியா அதிருப்தி

வீடமைப்பு நடவடிக்கைகளில் அனுபவமற்ற சீனா நிறுவனமொன்றிற்கு வடக்குகிழக்கில் வீடுகளை கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டமை குறித்து இந்தியா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

வடக்குகிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு 40,000 வீடுகளை கட்டுவதற்காக சீனா நிறுவனமொன்றிற்கு அமைச்சரவையின் அனுமதியை மீள்குடியேற்ற அமைச்சு கடந்த மாதம் பெற்றுக்கொடுத்திருந்தது.

மலையகத்தில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு வீடுகளை கட்டுவதற்கான அனர்த்த முகாமைத்துவ அமைச்சும் இந்த நிறுவனத்திற்கே அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை இலங்கையில் ஒரு வீட்டை கூட கட்டாத சீனா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியமை குறித்து இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது

வடபகுதி குறித்து அறிமுகம் இல்லாத அந்த பகுதியின் மண் மற்றும் காலநிலை குறித்து அறிந்திராத நிறுவனத்திற்கு எப்படி முழுமையான ஆய்வொன்றை மேற்கொள்ளாமல் அனுமதி வழங்கலாம் என இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது.

வடக்கில் கிழக்கில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் உரிய விதத்தில் நேர்மையாக முன்னெடுக்கப்படுவது குறித்து இந்தியா ஆர்வம் கொண்டுள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த வீடமைப்பு திட்ட்த்தில் எத்தனை சீனா தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுவார்கள் என்பது தெரியவில்லை இதுவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

லொறி குடைசாய்ந்து விபத்து

வத்துகாமம் பொலிஸ் பிரிவில் உள்ள மடவளை பஸார் தபால் நிலையத்திற்கு அருகில் லொறி ஒன்று பாதையை விட்டு விலகி குடைசாய்ந்து பக்கத்தில் உள்ள பலதொட்ட ஓயாவில் வீழ்ந்துள்ளது.

இவ்விபத்தில் லொறியின் சாரதி மற்றும் நடத்துனர் அதிஷ்ட வசமாக சிறுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

Comments (0)
Add Comment