பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (24.06.2018)

நாட்டை நேசிப்பவரே ஆட்சி செய்ய வேண்டும்

மக்களை சிரமங்களுக்கு உற்படுத்தி அரசியலில் ஈடுபடுபவர்பளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஊழல்களில் ஈடுபடாத மற்றும் நாட்டை நேசிப்பவர் ஒருவரே நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 3 ஆண்டுகளுக்குள் மக்களுக்கு மத்தியல் ஒற்றுமையயை ஏற்படுத்த தற்போதைய அரசாங்கத்தால் முடிந்தது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிறுத்தையை கொலை செய்தவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

சிறுத்தையை கொலை செய்த சம்பவம் தொடர்பில் இன்று (24) கைது செய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த இருவரையும் இன்று (24) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சிறுத்தையை கொலை செய்த ஏனைய நபர்களையும் கைது செய்யமாறு பொலிஸாரிற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்க நடவடிக்கை

சப்ரகமுவ மாகாணத்துக்கு உட்பட்ட பாடசாலைகளில், சாதாரண தரத்திலும் உயர்தரத்திலும் ஊடகக் கல்வியைத் தெரிவுசெய்துள்ள தமிழ் சிங்கள மொழிமூல மாணவர்களின் நலன் கருதி, பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மாகாணத்தின், கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கலாசார அமைச்சு, இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்துள்ளார்.

கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம், ஊடகம், பொறியியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் 20ஆம் திகதி முதல் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதோடு, இது தொடர்பிவான வர்த்தமானி அறிவித்தல், கடந்த வெள்ளிக்கிழமை (22) வெளியிடப்பட்டுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார்.

சப்ரகமுவ மாகாணத்தில் 1,125 அரச பாடசாலைகள் இயங்குவதோடு, அவற்றில் பெரும்பாலானவைகள் கஷ்ட மற்றும் அதிகஷ்டப் பாடசாலைகள் எனவும், அந்த பாடாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் வேறு மாகாணங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதால், ஆசிரியர் பற்றாக்குறை மாகாணத்தில் பாரிய பிரச்சினையாக காணப்படுகிறதென, அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ். வீரசூரிய மேலும் குறிப்பிட்டார்.

Comments (0)
Add Comment