பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (24.06.2018)

அரசு விரைவாக மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும்

அரசு விரைவாக மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹன் சோமசிங்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற கூட்டு எதிர்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்தாமல் அரசு தொடர்ந்தும் சர்வாதிகார ஆட்சியை முன்னெடுக்க திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரசாங்கத்தில் இருந்து விலகிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்களும் கூட்டு எதிர்க்கட்சிக்கு வருவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

14வது நாளாகவும் தொடரும் தபால் ஊழியர்களின் போராட்டம்

தபால் தொழிற்சங்கத்தின் போராட்டம் இன்று (24) 14வது நாளாகவும் தொடர்ந்து இடம்பெறுவதுடன், தற்போது அவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னர் இருந்தது போன்று பதவி உயர்வு மற்றும் பதவி நிரந்தரமாக்கல் ஆகியவற்றை தொடர்ந்து அமுல்படுத்த வலியுறுத்தி கடந்த 11ம் திகதி அவர்கள் தமது போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமையின் காரணமாக கொழும்பில் உள்ள தபால் தலைமையகத்திற்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டத்தையும் ஆரம்பித்துள்ளனர்.

இன்று குறித்த போராட்டம் 14 ஆவது நாளாகவும் நடைபெற்று வருகிறது.

மாகாண சபை தேர்தல் தொடர்பில் முக்கிய சந்திப்பு

மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை குறித்து ஆராயும் நோக்கில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்குமிடையில் முக்கியமான சந்திப்பொன்று எதிர்வரும் புதன்கிழமை மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் நடைபெறவுள்ளது.

இதன்போது அரசியல் கட்சிகள் தமது நிலைப்பாடுகள‍ை அறிவிப்பதுடன் புதிய முறைமை தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டு இணக்கபாட்டுக்கு வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Comments (0)
Add Comment