யாழில் சோகம்: 6 வயதுச் சிறுமியின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு..!! (படங்கள்)

சுழிபுரம் – காட்டுப்புலத்தில்
பாடசாலை மாணவி கொலை

சுழிபுரம் – காட்டுப்புலம் அ.த.க பாடசாலையில் கல்வி கற்கும் தரம் ஒன்று மாணவி சிவநேஸ்வரன் றெஜினா {வயது-06} கொலை செய்யப்பட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டமைக்கான அடையாளம் காணப்படுகின்றது. மாணவியின் தோடும் களவாடப்பட்டுள்ளது.

பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த பின்னர் பாடசாலைச் சீருடையுடன் சிறுமி காணாமற்போனார்.

தாயும் தந்தையும் வேலையின் நிமித்தம் {கூலி வேலை} வெளியே சென்றிருந்தனர்.

அந்த இடத்தில் வட்டுக்கோட்டை பொலிஸ் விசாரணை.

மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் இரவு 7.00 மணியளவில் சம்பவ இடத்திற்கு வருகைதந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் விசார ணகளை மேற்கொள்வதற்காக அப்பகுதியைச் சேர்ந்த 04 பேர் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment