பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (25.06.2018)

துப்பாக்கி சூட்டில் பாதாள உலக உறுப்பினர் பலி

பாதாள உலக உறுப்பினரான திலக் எனும் மானெல் ரோஹன துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.

கம்புருபிட்டிய பகுதியில் வைத்து பொலிஸ் விஷேட படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர் மாகந்துர மாதேஸின் உதவியாளர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கார் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து – இரு பொலிஸாருக்கு காயம்

பதுளை வின்சென் டயஸ் மைதானத்திற்கு அருகில் இன்று (25) பகல் 1 மணி அளவில் இடம்பெற்ற விபத்தில் 2 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் காயமடைந்துள்ளனர்.

கார் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில், அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த 2 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது கார் மோதியுள்ளது.

இதனால் கடமையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உட்பட இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் காயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, பதுளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குளவி தாக்குதல் காரணமாக பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

வலஸ்முல்ல, ஹொரவேல மஹா வித்தியாலய வளாகத்தில் உள்ள மரம் ஒன்றில் இருந்த குளவிக்கூடு கலைந்து, குளவிகளால் தாக்குதலுக்கு இலக்காகிய 5 மாணவர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் வலஸ்முல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (25) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, குளவி தாக்குதலுக்கு இலக்கான நான்கு மாணவர்கள் வைத்தியசாலையில் இருந்து சிகிச்சைப் பெற்ற நிலையில் வீடு திரும்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மற்றும் ஒரு மாணவன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

எனினும், இந்த சம்பவத்தை தொடர்ந்து ஏனைய மாணவர்களின் நலன் கருதி பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Comments (0)
Add Comment