பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (27.06.2018)

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 2322 பேர் கைது

நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 2322 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை வாகனப் போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 5254 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இந்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

அரசு தயாராக இருந்ததால் அனர்த்தத்தை வெற்றிகரமாக முகங்கொடுக்க முடிந்தது

அனர்த்த நிலமை தொடர்பில் அரசு முன் எச்சரிக்கையுடன் இருந்த காரணத்தால் இம்முறை ஏற்பட்ட அனர்த்தத்தை வெற்றிகரமாக முகங்கொடுக்க முடிந்ததாக நீர்ப்பாசன, நீர் வளங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (26) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அனர்த்தத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு 48 மணி நேரத்திற்குள் நிவாரணப் பணத்தை வழங்கி, அவர்களது வாழ்வாதரத்தை கட்டியெழுப்ப முடிந்தது வரலாற்றில் இதுவே முதல் முறை என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இனவாதம் நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறு

இனங்களுக்கு இடையில் வேற்றுமையை ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொள்வது நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பதாக சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று (26) களுத்துறை பகுதியில் இடம்பெற்ற மத நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இனவாதம் என்பது உடல் முழுவதும் பரவும் ஒரு நோய் என அல்பிரட் ஐன்ஸ்டைன் தெரிவித்துள்ளாதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இனவாதம் அல்லது மதவாதம் உள்ள எந்தவொரு நாடும் இதுவரை வளர்ச்சியடையவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மோட்டார் வாகனம் – பஸ் விபத்து

வெல்லவாய – மொனராகலை வீதியில் வருணகம பிரதேசத்தில் மோட்டார் வாகனமொன்றும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், ​குறித்த மோட்டார் வாகனத்தில் பயணித்த பெண்ணொருவரும், அவரது பிள்ளையும் காயமடைந்து, மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீரசேகரகம பிரதேசத்தைச் சேர்ந்த, 38 வயதுடைய பெண்ணும், அவரது 5 வயது ​மகனுமே விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பஸ்ஸின் சாரதியை கைது செய்துள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Comments (0)
Add Comment