பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (29.06.2018)

ரோகண விஜயவீரவை தேடி தருமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு

காணமற்போன மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோகண விஜயவீரவை நீதிமன்றில் முன்னிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவருடைய மனைவி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

ரோகண விஜயவீரவின் மனைவி ஶ்ரீமதி சித்ராங்கனி விஜேவீர தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் சட்ட மா அதிபர் உள்ளிட்ட 11 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம் திகதி உலபனே பிரதேசத்தில் வைத்து பாதுகாப்பு தரப்பினரால் ரோகண விஜயவீர கைது செய்யப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்டு 29 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இதுவரை அவர் எந்தவொரு நீதிமன்றத்திலும் ஆஜர் செய்யப்படவில்லை என்று மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது கணவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது தொடர்பில் சட்டரீதியான முறையில் இதுவரை அறிவிக்கவில்லை என்றும், இதன்காரணமாக அவருக்கு நேர்ந்தது என்னவென்று தெரியாதிருப்பதாகவும் அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த 16 உறுப்பினர்கள் பற்றி சரத் அமுனுகம

அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் அமர்ந்தாலும் இன்னும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பதவிகளில் இருந்து விலகவில்லை என்று அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம கூறியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போதே அவர் இதனைக் கூறினார்.

தம்முடன் இணைவதாயின் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் வகிக்கு பதவிகளில் இருந்து விலகிவிட்டு வர வேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அந்த 16 பேரிடமும் கூறியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அந்த உறுப்பினர்கள் பதவிகளை துறந்து நிர்வாணமாக தமது கட்சிக்கு வருமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூறியுள்ளதாக ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கூறினார்.

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிரான வழக்கு ஜூலை மாதம் 23ம் திகதிக்கு

அமைச்சராக இருக்கும் போது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் விபரக் கூற்றை சமர்பிக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று வழக்குகளின் விசாரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 23ம் திகதிக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அன்றைய தினம் பிரதிவாதிகள் தரப்பு சாட்சியாளர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் நீதிபதி இதன்போது உத்தரவிட்டார்.

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ அமைச்சராக இருந்த போது 2010 முதல் 2013ம் ஆண்டு வரையான காலத்துக்குறிய சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் விபரக் கூற்றை சமர்பிக்கவில்லை என்று குற்றம் சுமத்தி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இநடத வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

06 வகையான பயிர்களுக்கு இலவச காப்புறுதி

இந்த ஆண்டு முதல் ஆறு வகையான பயிர் செய்கைக்கு எவ்வித பங்களிப்பு கட்டணமும் இன்றி இலவசமாக விவசாயக் காப்புறுதி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி நெல், பெரிய வெங்காயம், உருளைக் கிழங்கு, சோளம், சோயா அவரை மற்றும் பச்சை மிளகாய் ஆகிய பயிர்களுக்கு இவ்வாறு இலவசமாக காப்புறுதி வழங்கப்படும்.

ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபா வீதமும், ஒரு ஹெக்டெயர் நிலப்பரப்பிற்கு ஒரு லட்சம் ரூபா வீதமும் காப்புறுதி வழங்கப்படும்.

இலங்கை விவசாய மற்றும் கமநல சபையின் ஊடாக இந்தக் காப்புறுதிகள் வழங்கப்படும்.

எனவே, இந்தப் பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு தமது உற்பத்திகளுக்கான கொடுப்பனவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டது

சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரியவாயு 138 ரூபாவால் குறைக்கப்படுவதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை கூடிய வாழ்க்கைச் செலவு குழு கூட்டத்தில் எரிவாயுவின் விலையைக் குறைக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

Comments (0)
Add Comment