பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (30.06.2018)

இராணுவ வீரர்கள் சிலருக்கு பதவி உயர்வு

இலங்கை இராணுவ வீரர்கள் சிலருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவி உயர் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

செங்கலடியில் கவனயீர்ப்புப் போராட்டம்

சுழிபுரம் மாணவி படுகொலையைக் கண்டித்தும் கொலையாளிகளுக்கு தண்டனை வழங்குமாறு வலியுறுத்தியும், இன்று (30) செங்கலடி நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

முற்போக்கு இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் செங்கலடி எல்லை வீதியில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

உணவகங்களின் அதிரடி நடவடிக்கை

சமயல் எரிவாயுவின் விலை நேற்று நள்ளிரவு முதல் குறைவடைந்த காரணத்தினால் தேநீர், உணவுப் பொதிகளின் விலைகளை குறைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி தேநீர் ஒன்றின் விலையை 5 ரூபாவாகவும் உணவுப் பொதியொன்றின் விலையை 10 ரூபாவினாலும் குறைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அச் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Comments (0)
Add Comment