பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (01.07.2018)

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி..!!

திருகோணமலை, சேறுநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹிந்தபுர பகுதியில் மின்சாரம் தக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு இன்று காலை உயிரிழந்தவர் 65 வயதுடைய சேறுநுவர. காவன்திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இவரது சடலம் சேனுவர பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை

கிழக்கு, ஊவா, மத்தி, வடக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இன்று தொடக்கம் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை வேளையில், இடியுடன் கூடிய பலத்தமழை பெய்யும் என்பதோடு, வேகமாக காற்று வீசும் என்பதால், பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை அவதான நிலையம் கோரியுள்ளது.

பாலியல் சேட்டை செய்தி; பொய் என்கிறது மஹரகம பொலிஸ்

மஹரகம பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில், தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களிடம் நள்ளிரவில் இனந்தெரியாத நபர்கள் சிலர் பாலியல் சேட்டைகளில் ஈடுபடுவதாக வெளியாகும் செய்திகளை அப்பகுதி பொலிஸார் மறுத்துள்ளனர்.

மஹரகம பொலிஸ் பிரிவுக்குற்பட்ட டெ்ம்பல் வீதி மற்றும் கென்டாஹென பகுதிகளிலேயே நள்ளிரவில் சிலர் பெண்களிடம் பாலியல் சேட்டையில் ஈடுபடுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் தமிழ்மிரருக்கு கருத்து தெரிவித்த மஹரகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி டி.எப்.மீதின், “இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை. இது பொய்யான செய்தி” எனவும் தெரிவித்தார்.

பட்டதாரிகளுக்கு வட்டியில்லாக் கடன்

பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறும் 25 வயத்திற்குட்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு தொழிற்றுறையில் ஈடுபடுவதற்காக வட்டியில்லா கடனை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளது.

“என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா” என்ற வேலைத்திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கப்படும் என திறைசேரி பிரதி செயலாளர் ஏ.ஆர்.தேசப்பிரிய தெரிவித்தார்.

“உலகத்தை நோக்கி முன்னேறக்கூடிய ஆற்றல் மிக்க தொழில்துறையினர் நாட்டில் இருக்கின்றனர். இருப்பினும் தற்பொழுது சந்தையில் நிலவும் வட்டி வீதங்களின் கீழ் கடனை பெற்று வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பது சிரமமாக இருப்பதாக அவர்கள் நினைக்கின்றனர்” என அவர் தெரிவித்தார்.

இந்த நிலைப்பாட்டை முற்றாக புறந்தள்ளி ஆற்றல்மிக்க தொழில் துறையினர் நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்ய வைப்பதே “என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என்றும் அவர் கூறினார்.

2018ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளுக்கு அமைவாக தேசிய கடன் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு தொழில்துறையினருக்கு கடன் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் சிரமங்கள் இன்றி தொழில் துறையினருக்கு வர்த்தக நடவடிக்கைளை ஆரம்பிக்க முடியும் என்றும் திறைசேரி பிரதி செயலாளர் ஏ.ஆர்.தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.

Comments (0)
Add Comment