பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (03.07.2018)

இந்த ஆண்டில் 42 பேர் இலஞ்சம் பெற்ற குற்றவாளிகள்

இந்த ஆண்டின் கடந்த காலத்திற்குள் இலஞ்சம் பெற்றுக் கொண்ட சம்பவங்கள் தொடர்பில் 42 பேர் நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறியப்பட்டுள்ளதாக இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு கூறியுள்ளது.

கடந்த ஆண்டில் மாத்திரம் இலஞ்சம் பெற்றுக் கொண்ட சம்பவத்தில் 57 பேர் திமன்றத்தால் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டதாக அந்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன தெரிவித்தார்.

இலஞ்சம் மற்றும் ஊழலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு திட்டத்திற்காக கருத்துக்களையும் யோசனைகளையும் பெற்றுக் கொள்வதற்காக நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார்.

இலங்கை கிரிக்கட்டின் தேர்தலை 06 மாதத்திற்குள் நடத்தவும்

இலங்கை கிரிக்கட்டின் தேர்தலை எதிர்வரும் 06 மாத காலத்திற்குள் நடத்துமாறு சர்வதேச கிரிக்கட் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறு நடத்த தவறும் பட்சத்தில் இலங்கை கிரிக்கட்டின் உறுப்புரிமை தொடர்பில் மிள்பரிசீலனை செய்ய வேண்டி ஏற்படும் என்று சர்வதேச கிரிக்கட் கவுன்சில் கூறியுள்ளது.

நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஐசிசியின் வருடாந்த மாநாட்டின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

கப்பம் பெற்ற பெண் கைது

மரண அச்சுறுத்தல் விடுத்து 100,000 ரூபா கப்பம் பெறுவதற்கு முயற்சித்த பெண் ஒருவர் அம்பலாங்கொட, பலப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பலப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கோரிய கப்பத் தொகையில் 50,000 ரூபாவை பெற்றுக் கொள்ளும் போது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒபடவத்தை, பெந்தொட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

விபத்தில் ஒருவர் பலி

மட்டக்களப்பு – பொலன்னறுவை வீதியில் மியன்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லொறி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் லொறியின் சாரதி உட்பட மூன்று பேர் காயமடைந்து வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சாரதி உயிரிழந்துள்ளார்.

பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த ஏனைய இரண்டு பேரும் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மீண்டும் போராட்டத்தில் ஈடுபட தயாராகும் தபால் தொழிற்சங்கம்

நாளைய தினத்திற்கு முன்னர் தபால் ஊழியர்களுக்கு உரிய ஜூன் மாத சம்பளத்தை வழங்காவிட்டால் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட போவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் கூறியுள்ளது.

அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பணியாளர்களின் 06 நாட்களுக்குரிய சம்பளத்தை வழங்காதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார கூறினார்.

அத்துடன் ஜூன் மாதத்தில் 06 நாட்களுக்குறிய சம்பளத்தை வழங்காதிருக்க அமைச்சரவை பத்திரம் ஒன்றும் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அவர் கூறினார்.

இவ்வாறு சம்பளம் வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்க போரா

Comments (0)
Add Comment