பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (04.07.2018)

கல்வித் துறை அதிகாரிகள் பணி நிறுத்தம்\

கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட துறைசார்ந்த பல அதிகாரிகள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் கூறியுள்ளது.

அரசியல் பழிவாங்களுக்கு உள்ளானவர்கள் என்று கூறி கல்விச் சேவையில் நியமனங்கள் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அந்த சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்ணான்டோ கூறினார்.

கல்வித் துறை சார்ந்த பல தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் இணைந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

அதேவேளை வேலைநிறுத்தம் செய்யாது ​சேவைக்கு வருமாறு அனைத்து கல்வித்துறை அதிகாரிகளிடமும் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நிலுவைத் தொகையை தவணை முறையில் செலுத்த இணக்கம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை தவணை முறையில் செலுத்துவதற்கு ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இணக்கம் எட்டப்பட்டதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் நீல் ஜயசேகர கூறினார்.

இதன்காரணமாக ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு தேவையான எரிபொருளை தொடர்ந்து விநியோகம் செய்வதாக நீல் ஜயசேகர கூறினார்.

விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு

தெவுந்தர – ஹக்மன வீதியில், பிட்டவல்கமுவ பிரதேசத்தில் இன்று காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

பஸ் வண்டி ஒன்றும் எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த இரண்டு மாணவர்களும் நரவல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

அதே பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது மற்றும் 19 வயதுடைய இரண்டு மாணவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

பிரேதம் தொடர்பான பரிசோதனை இன்று இடம்பெற உள்ளதுடன், பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இசுருபாய அருகில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல்; வீதிக்கு பூட்டு

பெலவத்தை, இசுருபாய பிரதேசத்தில் கல்வியமைச்சுக்கு அருகில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட அமைதியற்ற நிலை காரணமாக அந்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment