பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (05.07.2018)

மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிதி வழங்கியதை மறுக்கிறது சைனா ஹாபர் நிறுவனம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பணிகளுக்காக நிதி வழங்கியதாக சர்வதேச ஊடகங்கள் வௌியிட்டுள்ள செய்தி அடிப்படையற்றது என்று சைனா ஹாபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விஜயகலாவின் கருத்தை வன்மையாக கண்டிக்கும் சரத் பொன்சேகா

எல்.ரி.ரி.ஈ தொடர்பில் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேலியகொட பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கிரிவெஹர துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் சந்தேகநபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 07 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜூலை மாதம் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் நேற்று திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது இவ்வாறு உத்தரவிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கதிர்காமம், கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி கோபவக தம்மிந்த தேரர் உட்பட இரண்டு தேரர்கள் மீது கடந்த மாதம் 12ம் திகதி இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

தாய்லாந்து பிரதமர் வருகிறார்

தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயட் சான்-ஓ-சா, இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இரண்டுநாள் விஜயத்தை மேற்கொண்டு, எதிர்வரும் 12 ஆம் திகதியன்று வருகைதரும் அவர், நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்.

அத்துடன், படைத்தரப்பு முக்கியஸ்தர்களையும் அவர், சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment