பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..!! (05.07.2018)

நியுயோர்க் டைம்ஸ் செய்தி குறித்து சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடுகிறோம்

நியுயோர்க் டைம்ஸ் செய்தி சம்பந்தமாக யாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடி வருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சேறு பூச முற்பட்டு இராஜதந்திர பிரச்சினையாக மாறி மீண்டும் சீனாவை பகையாளியாக மாற்றிக் கொள்வதற்கு அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் கூறினார்.

தேசிய கணக்காய்வு சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

தேசிய கணக்காய்வு சட்டமூலம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தை ஆளும் கட்சியின் பிரதம கொரடாவான அமைச்சர் கயந்த கருணாதிலக்க கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

தேசிய கண்காய்வு ஆணைக்குழுவை வலுப்படுத்தி, கணக்காய்வு அலுவலகம் ஒன்றை ஸ்தாபிக்கும் யோசனைகள் சட்டமூலத்தில் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான இரண்டாம் கட்ட விவாதம் இன்றைய நாள் முழுவதும் பாராளுமன்றில் இடம்பெற்றது.

கொள்கலன் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

ஒருகொடவத்த சுங்கப் பிரிவினரால் பத்து மில்லியனுக்கும் அதிகமான ​வெளியூர் ரக மதுபானப் போத்தல்கள் மற்றும் போதைப் பொருட்களுடனான கொள்கலன் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த மதுபானம் மற்றும் போதைப் பொருட்களடங்கிய கொள்கலனின் உரிமையாளர் பற்றிய தகவல்கள் இதுவரை கி​டைக்கவில்லையென, சுங்கப்பிரிவின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

குறித்த கொள்கலன் இத்தாலி நாட்டிலிருந்து இங்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதில் எந்தவிதமான முகவரியும் குறிப்பிடப்படாததுடன், உரிமையாளர் தொடர்பிலான விபரங்களும் உள்ளடக்கப்படவில்லையெனத் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் (05) குறித்த கொள்கலனை சோதனையிட்ட போதே, அதிலிருந்து மதுபானங்கள் மற்றும் 2.9 மில்லியன் ரூபாய் பெறுமதியான 2 கிலோ 945 கிராம் நிறையுடைய ஹசீஸ் என்ற போதைப் பொருளும், 2 கிலோகிராம் குஷ் எனப்படும் கஞ்சா வகையும் கைப்பற்றப்பட்டதாகத் ​தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேலதிகமாக வெளியூர் ரக மதுபானப் போத்தல்கள் 220, வைன் போத்தல்கள் 225 மற்றும் பீர் டின்கள் 100 ஐயும் கைப்பற்றியதாகத் தெரிவித்தனர்.

மேலும் இதுதொடர்பில் சுங்கப் பிரிவை சேர்ந்த இருவரை கைது செய்துள்ளதாகவும், சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன மேலும் தெரிவித்தார்.

Comments (0)
Add Comment