பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (06.07.2018)

வாகன உரிமையாளர்களும் வௌிநாட்டு சுற்றுலா செல்வோரும் வரி செலுத்த வேண்டும்

வாகனம் ஒன்றை வைத்திருக்கும் மற்றும் வௌிநாட்டு சுற்றுலாக்களை மேற்கொள்ளும் ஒவ்வொரு நபரும் வருமான வரி செலுத்த வேண்டும் என்று உள்நாட்டு இறைவரி ஆணையாளர் ஐவன் திசாநாயக்க கூறியுள்ளார்.

காலியில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

வரி செலுத்த வேண்டிய வாகனம் ஒன்றை உரிமையில் வைத்திருக்கும் ஒவ்வொரு நபரும் பொதுவாக வரி செலுத்தக் கூடிய வருமானம் உள்ளவராக இருப்பதாக அறியப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கையில் பெரும்பாலானோர் விடுமுறைகளின் போது வௌிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதாகவும் அவ்வாறு சுற்றுலா செல்வோர் வரி செலுத்த முடியுமானவர்களாக அறியப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாளை சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகத்தில் தடை

கொழும்பு மாவட்டத்தின் சில பிரதேசங்களில் நாளை நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதுடன், மேலும் சில பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட உள்ளது.

நாளை காலை 09.00 மணி முதல் 09 மணி நேரத்திற்கு இவ்வாறு நீர்வெட்டு மற்றும் குறைந்த அழுத்த நீர் விநியோகம் அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கூறியுள்ளது.

அதன்படி கோட்டே மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்கள் மற்றும் கொழும்பு 05 இல் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதுடன், கொழும்பு 04, 06, 07, 08 மற்றும் மகரகம ஆகிய பிரதேசங்களில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட உள்ளது.

சுகாதார சேவையின் உயர் பதவிகளில் கடமை நேர அதிகாரிகள்

தேசிய இரத்த பரிமாற்ற மத்தியநிலையம் உள்ளிட்ட சுகாதார நிறுவனங்கள் பலவற்றின் உயர் பதவிகளுக்கு கடமைநேர அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதால் அந்த சேவை தோல்வியடைய காரணமாகிறது என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உப செயலாளர் நவீன் சொய்சா கூறினார்.

கடமைநேர அதிகாரிகள் நியமிக்கப்படுவதன் மூலம் அந்த அதிகாரிகள் மேலதிகாரிகளின் தேவைக்கு ஏற்ப நியமிக்கப்படுவதாக நவீன் சொய்சா கூறினார்.

Comments (0)
Add Comment