பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (06.07.2018)

வாக்காளர் பெயர் பதிவு விண்ணப்ப படிவங்களை ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் சமர்ப்பிக்கவும்

2018 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பெயர் பதிவு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் கிராம உத்தியோகத்தரிடம் கையளிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ஜூலை 15 ஆம் திகதி முதல் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள கிராம சேவகர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் பெயர் பதிவு விண்ணப்ப படிவங்களை கையளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கிராம சேவகர்கள், பொதுமக்களால் கையளிக்கப்படும் பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் பெயர் பதிவு விண்ணப்ப படிவங்களை தேர்தல்கள் செயலகத்தில் கையளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பஸ் உரிமையாளரிடம் இலஞ்சம் பெற்ற முகாமையாளருக்கு 40 ஆண்டு சிறை

வீதிப் போக்குவரத்து உரிமம் வழங்குவதற்காக தனியார் பஸ் உரிமையாளர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்றுக் கொண்டமை உள்ளிட்ட 08 குற்றங்களில் குற்றவாளியாக இனம்காணப்பட்ட மேல் மாகாண சாலை பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் முன்னாள் முகாமையாளருக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தண்டனை 05 ஆண்டுகளில் முடிவுறும் வகையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இன்று உத்தரவிட்டதாக அத தெண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

இதுதவிர பிரதிவாதிக்கு 40,000 ரூபா அபராதம் மற்றும் அவர் இலஞ்சமாக பெற்றுக் கொண்ட 10,000 ரூபா தண்டனையாகவும் பெற்றுக் கொள்ள நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் பஸ் உரிமையாளருக்கு 05 இலட்சம் ரூபா நட்ட ஈடும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஜனபிரித் தாய்வான் ஜனாதிபதியுடன் சந்திப்பு

சர்வதேச சாரணர் குழு உறுப்பினரும், இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதி ஆணையாளருமான, சிரேஷ்ட சட்டத்தரணி ஜனபிரித் பெர்னான்டோ, கடந்த 1 ஆம் திகதி தாய்வான் ஜனாதிபதி டிசாயிங் வென்னை சந்தித்து ( Tsai Ing-wen) கலந்துரையாடியிருந்தார். இந்த சந்திப்பின்போது, தாய்வான் மற்றும் சர்வதேச சாரணியம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, ஜனபிரித் பெர்னான்டோ தாய்வான் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கி வைத்தார்.

Comments (0)
Add Comment