பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (07.07.2018)

கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

பேலியகொட, மானெல்கம களனி பிரதேசத்தில் ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களனி வலய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 08 கிலோகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் களனி பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

ஹிக்கடுவ பிரதேசத்தில் காலி வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு

ஹிக்கடுவ, வெரல்லன பிரதேசத்தில் காலி – கொழும்பு பிரதான வீதியில் தற்போது போக்குவரத்து தடைப்பட்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அந்தப் பிரதேசத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதன் காரணமாகவே போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் 07 பேர் கடலுக்கு சென்று காணாமல் போயுள்ள நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

ஆழ்கடல் மீன்பிடிக்கு செல்லும் மீனவர்களுடன் கரையில் இருப்பவர்கள் தொடர்பை ஏற்படுத்துவதற்கான ராடர் கருவியை இயக்குவதற்கு படகு உரிமையாளர்களிடம் மாதாந்தம் 3000 ரூபா அறவிடப்பட்ட போதிலும், அரசாங்கத்தால் அந்தக் கருவி இயக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது.

அந்தக் கருவியை இயக்கினால் காணாமல் போயுள்ள மீனவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 06 பேர் கைது

வீடுகளை உடைத்து சொத்துக்களை திருடுதல் மற்றும் பாதையில் நிறுத்தப்பட்டிருக்கின்ற மோட்டார் சைக்கிள்களை திருடுதல் சம்பந்தமாக 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிரிஹானை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பிட்டகோட்ட, கோட்டே மற்றும் ஹோகந்தர பிரதேசங்களில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் பின்னர் மிரிஹாணை, அத்துருகிரிய, தங்காளை, வெல்லம்பிட்டிய, கொலன்னாவ மற்றும் பியகம ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற பல திருட்டு சம்பவங்கள் தொடர்பில் தெரிய வந்துள்ளது.

சநந்தேகநபர்கள் 18, 19 மற்றும் 24 வயதுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ள நிலையில் மிரிஹானை பொலிஸ் நிலையம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கட்சித் தலைவர்களுக்கு மஹிந்த கடிதம்

கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சட்ட நடவடிக்கை​களை பூர்த்தி செய்ய ​வேண்டுமென, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கடிதம், அரசியல் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக, மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான சட்டங்களை இயற்றுவதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மாத்திரமே உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவது தொடர்பில், நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதம் தொடர்பில் வினவியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Comments (0)
Add Comment