பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (07.07.2018)

பழைய குளங்களை சீர் செய்ய நடவடிக்கை

நாட்டில் பழைமை வாய்ந்த சிறிய குளக்கட்டமைப்பை சீர் செய்வதற்கான வேலைத்திட்டம் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதற்காக அரசாங்கம் தொள்ளாயிரம் கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. நாட்டில் குளக்கட்டமைப்பில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் உண்டு.

இவற்றை சீர் செய்வதன் உடாக பெரும்பாலானவற்றின் மூலம் முறையான விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

விவசாய அமைச்சின் ஆயிரம் குளங்கள், ஆயிரம் கிராமங்கள் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் கிராமசக்தி வேலைத்திட்டத்தின் ஊடாக குளங்களை சீர்செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

பொலிஸ் முறைப்பாடுகளை சிறிய விடயமாக கருத முடியாது

பொலிஸாருக்கு கிடைக்கும் எந்தவொரு முறைப்பாடுகளையும் சிறியதாக கருதி விட முடியாது என்று பெலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்நதர கூறியுள்ளார்.

யட்டியாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

பொலிஸ் நிலையத்தில் சிறு முறைப்பாட்டுப் பிரிவு இல்லை என்றும், பொலிஸாருக்கு கிடைக்கின்ற முறைப்பாடுகளை சிறியதாக கருத முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நபர் ஒருவர் முறைப்பாடு செய்ய வந்தால் அந்த முறைப்பாட்டில் துக்கம் இருப்பதால் அதுபோன்ற முறைப்பாடுகளை சிறிய விடயமாக கருதிவிட முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

தபால் மா அதிபருக்கு இடமாற்றம்

தபால் மா அதிபர் ரோஹண அபேரத்ன இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஜனாதிபதி செயலகத்திற்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தபால் துறை அமைச்சர் எம்.எச்.எம். ஹலீம் கூறினார்.

ரோஹண அபேரத்ன 10 ஆண்டுகள் தபால் மா அதிபராக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் தபால் மா அதிபரின் இடமாற்றத்தால் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகள் எழுவதற்கு வாய்ப்பிருப்பதாக தபால் தொழிற்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார கூறினார்.

‘மறுசீரமைப்பு நடவடிக்கைகள் வார இறுதியில் பூர்த்தியாகும்’

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்யப்பட்டு வருவதாக, கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

இந்த வார இறுதியில் இந்த நடவடிக்கை முடியுமெனத் தெரிவித்த அவர், வெகுவிரைவில், வெற்றிடமாக உள்ள பதவிகளில் அமைப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

Comments (0)
Add Comment