பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (09.07.2018)

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக 1398 முறைப்பாடுகள்

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதிக்குள் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக 1398 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவற்றுள் 908 முறைபாடுகள் தொடர்பில் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருப்பதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த சந்திரசிரி தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக 2768 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லோட்டஸ் வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

ஆர்ப்பாட்டம் பேரணி ஒன்றின் காரணமாக லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கணக்காய்வாளர்கள் மற்றும் கணக்காளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றின் காரணமாக இப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதனால் மாற்றுவழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுருத்தியுள்ளனர்.

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக 1398 முறைப்பாடுகள்

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதிக்குள் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக 1398 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவற்றுள் 908 முறைபாடுகள் தொடர்பில் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருப்பதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த சந்திரசிரி தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக 2768 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வன்னியாகுளம் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில்

அநுராதபுரம், வன்னியாகுளம் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை ஜூலை 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அநுராதபுரம் பிரதான நீதவான் ஹர்சன கெகெனாவெலவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம், வன்னியாகுளம் பகுதியை சேர்ந்த சுஜீவ பிரசன்ன குமார என்பவர் கடந்த 06 ஆம் பகல் இனம்தெரியாத குழு ஒன்றினால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரையும் பொலிஸார் நேற்று கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி ரவைகளுடன் பெண் கைது

ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யடகல பகுதியில் துப்பாக்கி ரவைகள் மற்றும் வாளொன்றுடன் 27 வயதுடைய பெண் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கிணங்க சுற்றிவளைப்பினை மேற்கொண்ட போதே குறித்த பெண்ணை கைதுசெய்துள்ளதுடன் அவரிடமிருந்து 130 ற்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகளையும் வாளொன்றினையும் கைப்பற்றியுள்ளனர்.

இந் நிலையில் குறித்த சந்தேக நபரை இன்று கல்பிட்டிய நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவரை பிணையில் செல்ல அனுமதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

வல்லப்பட்டைகளுடன் ஒருவர் கைது

கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழை பகுதியல் நேற்று சட்ட விரோத வல்லப்பட்டைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரிடமிருந்து 4 கிலோ 405 கிராம் வல்லம்பட்டையை மீட்டுள்ளதாக கல்குடா பொலிஸ் பொருப்பதிகாரி ஜ.பி.அனுரதேசப்பிரிய சுசந்த தெரிவித்தார்.

. வாகரை கஜிவத்தையில் உள்ள காசியப்ப கடற்படையினர் தெரிவித்த இரகசிய தகவலையடுத்து குறித்த சந்தேக நபரை பேத்தாழை பகுதியில் வைத்து அவரிடம் இருந்த பையினை பரிசோதித்த போது இவை கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தார்.

சந்தேக நபரை இன்று வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment