பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (11.07.2018)

ஜனாதிபதி சட்டத்தரணி காலமானர்

ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய நேற்று (10) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் தனது 74 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

விஜயகலாவின் கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ள பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு

தமிழீழ விடுதலை புலிகள் குறித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்ளமாறு சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

கிரிபத்கொட சம்பவம்; மனைவியும் காதலனும் கைது

கிரிபத்கொட, நாஹேன பகுதியில் முச்சக்கர வண்டியில் வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவர் உயிரிழந்திருந்த சம்பவத்தில் அவரது மனைவியும் மனைவியின் காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

கிரிபத்கொட, நாஹேன பகுதியில் முச்சக்கர வண்டியில் வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் ஒருவரது சடலம் நேற்று காலை மீட்கப்பட்டிருந்தது.

ஹுனுபிட்டிய, நாஹேனவத்த பகுதியை சேர்ந்த 40 வயதுடைய தனுஷ்க தரங்க என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வத்தள, ஹெந்தல சந்தியில் முச்சக்கர வண்டி ஓட்டுபவர் என்றும் அவருடைய வீட்டிற்கு வந்த இருவரினால் அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸா்ர தெரிவிக்கின்றனர்.

தாதியர்கள் இன்று எதிர்ப்பு பேரணி

தாதியர் சேவையில் காணப்படுகின்ற 06 பிரச்சினைகளுக்கு தீர்வு கேட்டு இன்று எதிர்ப்பு பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அகில இலங்கை தாதியர் சங்கம் கூறியுள்ளது.

இன்று நண்பகல் 12 மணியளவில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து சுகாதார அமைச்சு வரை இந்த பேரணி செல்லும் என்று அந்த சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எச்.எம்.எஸ்.ஜீ மெதிவத்த கூறினார்.

இதேவேளை அரச நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் நாளை நாடு தழுவிய ஒருநாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவதாக அரச சேவை நிறைவேற்று அதிகாரிகள் ஒன்றிய குழுமம் தெரிவித்துள்ளது

இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கவின் பதவி நீடிப்பு

இராணுவத் தளபதி லுதினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த பதவி நீடிப்பை வழங்கியுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

Comments (0)
Add Comment