பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (11.07.2018)

118 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது

சேருவாவில, மாவடிச்சேன பகுதியில் வைத்து ஹெரோயினுடன் இருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

குறித்த நபர்களிடம் இருந்து 10 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

118 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

எமது கட்சியின் ஒரே தெரிவு மஹிந்த ராஜபக்ஷ மட்டுமே

நாட்டின் ஆட்சிக்கு எமது கட்சியின் சார்ப்பில் ஒரே தெரிவு மஹிந்த ராஜபக்ஷ மட்டும் தான் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நேற்று (10) மாலை 6 மணியளவில் ஆரம்பமான கலந்துரையாடல் சுமார் 2 மணி நேரம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்த ராஜபக்ஷவை நாட்டின் தலைவராக நியமிக்க வேண்டும் என்றால் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நிலைபேறான அபிவிருத்தயை 2030ம் ஆண்டளவில வெற்றி கொள்ளுவதே இலக்கு

சமகால அரசாங்கம் நிலைபேறான அபிவிருத்தி இலக்கை 2030ஆம் ஆண்டளவில் வெற்றி கொள்வதே இலக்காகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தெற்காசிய நாடுகளின் சபாநாயகர்களின் மூன்றாவது வருடாந்த மாநாடு இன்று காலை ஆரம்பமானது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் இந்த இலக்கை பூர்த்திச் செய்வதற்கு அரசாங்கம் மற்றும் தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் விசேடத் திட்டமொன்றை தேசிய கொள்கையாக இனங்காணப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

பிரதமர் தலைமையில் இந்த மாநாடு பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் ஆரம்பமானது. இந்த நிகழ்வில் வரவேற்புரையை இலங்கையின் சபாநாயகர் கரு ஜயசூரிய வழங்கினார்.

சிறிய மற்றும் மத்திய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்கில் விசேட கடன் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயல் திட்டத்தை கண்காணிப்பதற்கு பாராளுமன்றத்தில் விசேட கண்காணிப்புக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டளவில் இந்த இலக்குகளை அடைய எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு

கொழும்பின் புறநகர பகுதிகளில் இன்று அதிகாலை வீசிய பலத்த காற்று காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

அந்த வகையில் கல்கிஸை மற்றும் தெஹிவளை பகுதகளில் சேதமடைந்த வீடுகளுக்கே இவ்வாறு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப கட்டமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா வீதம் வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்த பலத்த காற்று காரணமாக சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 264 ஆக அதிகரிப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment