பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (12.07.2018)

மரண தண்டனையை அமுல்படுத்துவது சமூகத்துக்கு சிறந்தது..!!

மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்த எடுத்த தீர்மானம் சமூகத்தின் சிறப்புக்கு காரணமாக இருக்கும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கூறினார்.

இந்த தீர்மானம் இதற்கு பல காலங்களுக்கு முன்னரே எடுத்திருக்க வேண்டிய என்று அவர் கூறியுள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் பேசும் போது பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன இவ்வாறு கூறினார்.

இலங்கையை இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக மாற்றும் வேலைத்திட்டம்

திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் இலங்கையை இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக மாற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திரத்தின் தற்போதைய பொருளாதார வளர்ச்சியை நோக்கும் போது கொழும்பு துறைமுகத்தை போன்று ஹம்பாந்தோட்டை துறைமுகமும் முக்கியமான ஒரு இடமாக திகழ்கின்றது.

அலரி மாளிகையில் இடம்பெற்ற திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டத்தை முன்வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பெரஹராவின் போது யானை தாக்கிய பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

இரத்தினபுரி, கஹவத்த நகரில் அண்மையில் இடம்பெற்ற பெரஹராவின் போது யானை குழம்பிய சம்பவத்தில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பொலிஸ் அதிகாரி நேற்று (11) இரவு உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

கடந்த 01ம் திகதி இரத்தினபுரி, கஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற பெரஹராவின் போதுயானை குழம்பியதில் 30 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தில் யானையால் மிதிபட்டு படுகாயமடைந்து வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரி உயிரிழந்துள்ளார்.

உடவளவை பொலிஸ் நிலையத்தில் சேவை புரிந்த 51 வயதுடைய பொலிஸ் அதிகாரி ஒருவரெ உயிரிழந்துள்ளார்.

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் தவறியுள்ளது

வடக்கு கிழக்கு மக்களின் வீடுகள் இன்மை பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் தற்போதுவரை தோல்வியடைந்திருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

அரசாங்கம் இதற்காக சரியான தலையீடு செய்யாமை வருத்தமளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

தம்புள்ளை பிரதேசத்தில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன் இதனைக் கூறியுள்ளார்.

விருந்தில் பங்கேற்ற பெண் மாயம்

நீர்கொழும்பில் விருந்துபசார நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக சென்ற இரண்டு குழந்தைகளின் தாய் காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்பிட்டியைச் சேர்ந்த, 29 வயது டபிள்யு.இஷாரா நிஷாதி என்ற பெண்ணே காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காணாமற்போயுள்ள பெண்ணின் கணவரால் நீர்கொழும்பு பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் உரிய பதில் கிடைக்காத நிலையில், அவர் கல்பிட்டி பொலிஸில் நேற்றைய தினம் மீண்டும் முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 6ஆம் திகதி இரவு நீர்கொழும்பில் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வில் ஒன்றில் குறித்த பெண், தனது இரு குழந்தைகள் மற்றும் கணவருடம் பங்கேற்றுள்ளார்.

இரவு ஆரம்பமான விருந்துபசார நிகழ்வு அதிகாலை வரை நீடித்துள்ளர். விருந்துபசாரத்தின் நிறைவில் தனது மனைவி காணாமற்போயுள்ளமை தொடர்பில் கணவர் அறிந்துகொண்டுள்ளார்.

தனது மனைவி காணாமற்போனமைக்கான காரணம் தெரியவில்லை எனவும் குறித்த நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். கல்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Comments (0)
Add Comment