பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (13.07.2018)

முச்சக்கர வண்டிகளின் கட்டணங்களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!!

முச்சக்கர வண்டிகளின் கட்டணம் தொடர்பில் ஒரு கட்டுப்பாடு அவசியம் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பு, கோட்டை ரயில் நிலையம் முன்பாக இன்று (13) இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

அகில இலங்கை கூலி வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக, அமைப்பின் தலைவர் சரித் அதத்தனபொல தெரிவித்துள்ளார்.

வேலையில்லா பிரச்சினையை தீர்க்க ஒரு தேசிய கொள்கை அவசியம்..!!

நாட்டில் வேலையில்லா பிரச்சினையை தீர்க்க ஒரு தேசிய கொள்கை அவசியம் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி இக்கருத்தினை தெரிவித்தார்.

ஒருவரின் தகுதியின் அடிப்படையில் வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான எந்த ஒரு தேசிய கொள்கையும் நாட்டில் இல்லை எனவும், பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

கடனை திருப்பி செலுத்துவதற்காக மக்களிடம் அதிக வரி..!!!

ஒரே ஆட்சிக் காலத்திற்குள் அதிக கடன் பெற்று இருப்பது தற்போதைய அரசாங்கமே என்று தேசிய விடுதலை முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் கூறியுள்ளார்.

அந்தக் கடனை செலுத்துவதற்காக பொதுமக்களிடம் அதிக வரி அறவிடப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Comments (0)
Add Comment