பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (13.07.2018)

தூக்கு தண்டனை கட்டாயம் ​வேண்டும்..!!

மரண தண்டனையை மீண்டும் கொண்டு வருவதற்கு காரணம் அண்மையில் அநுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவமே என்று நிலையான அபிவிருத்தி, வனவிலங்கு மற்றும் பிராந்திய அபிவிருத்தி பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும கூறினார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார்.

அண்மையில் தெரண செய்தியில் ஔிபரப்பான அநுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவமே மிகவும் மரண தண்டனையை மீண்டும் கொண்டு வருவதற்கான அண்மைய சம்பவம் என்றும் தூக்குமரம் போகம்பரையில் மாத்திரமன்றி அனைத்து மாவட்டங்களிலும் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

போதைப் பொருள் வர்த்தகர்கள் முழு நாட்டையும் தமது ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தூக்குமரம் கட்டாயமாக இருக்க வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும கூறினார்.

கைதியின் மனைவியை கொலை செய்ய முற்பட்ட சந்தேகத்தில் கைது..!!

வெலிக்கட சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரின் மனைவியை கொலை செய்ய முற்பட்டதாக சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

மலை உச்சியில் தீப்பரவலில் சிக்கிக் கொண்ட இளைஞர்கள்..!!

பதுளை – ஹல்தும்முல்லை – வங்கெடிகல மலையை பார்வையிட சென்ற 10 இளைஞர்கள், அந்த மலை உச்சியில் திடீரென ஏற்பட்ட தீப்பரவலில் சிக்குண்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து அவர்களை மீட்பதற்காக தியதலாவ இராணுவ முகாமின் படை வீரர்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் சம்பவிடத்திற்கு சென்றுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

மஹாநாம மற்றும் திஸாநாயக்க மீண்டும் விளக்கமறியலில்..!!

இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி பேராசிரியர் ஐ.கே மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திஸாநாயக்க ஆகியோரின்விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

அவர்களை எதிர்வரும் 24ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

Comments (0)
Add Comment