பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (14.07.2018)

சிறு குழந்தைக்கு கூட பாதையில் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது

சிறு குழந்தைக்கு கூட பாதையில் இறங்கி செல்ல முடியாத நிலை தற்போது உருவாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாரோஹேன்பிட ஶ்ரீ அகயாராம விகாரையில் இன்று (14) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் ஹுனுபிட்டிய, கங்காராம விகாராதிபதி கலபொட ஞானிச்சார தேரர், முன்னாள் பாதுகாப்பு செயலளார் கோட்டாபய ராஜபக்ஷ, மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய மற்றும் பேராசிரியர் கலோ பொன்சேக ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

தற்போதையை சமூகம் போதைப்பொருட்களால் நிரம்பியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

கடற்படையை அறிவுறுத்தியுள்ள பிரதமர்

இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஏற்படக் கூடிய பல்வேறு நெருக்கடியான நிலைமைகளை தவிர்ப்பதற்கான புதிய மூலோபாயங்கள் பற்றி கவனம் செலுத்துமாறு கடற்படையை அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற, பண்டாரநாயக்க சர்வதேச ராஜதந்திர பயிற்சி நிறுவனத்தில் கல்வி பயின்ற பட்டதாரிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதமர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்கள் அதிகரிக்கக்கூடும் என்பதால் அதுபற்றி விசேட கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் நெருக்கடிகளையும் முரண்பாடுகளையும் தவிர்ப்பதற்கு இந்து சமுத்திர பிராந்திய முக்கிய தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, இந்திய பசுபிக் பிராந்தியத்திற்கென சிறந்த கருத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும் இதனை ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கு மேலதிகமாக அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்த மாத இறுதிக்குள் க.பொ.த மாணவர்களுக்கு அடையாள அட்டை

இம்முறை நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் தேசிய அடையாள அட்டை அடுத்த மாதம் இறுதிக்கு முன்னர் விநியோகிக்கப்படவுள்ளது.

இதுதொடர்பாக ஆட்பதிவுத் திணைக்களம் மற்றும் திணைக்களத்தின் செயற்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் ஹர்ஷ இலுப்பிட்டிய தகவல் தருகையில், முன்னெடுக்கப்பட்ட துரிதமான வேலைத்திட்டத்தினால் அடையாள அட்டைகளை வழங்கும் செயற்பாடு செயற்றிறன் மிக்கதாக இடம்பெற்றதே இதற்குக்காரணம் என்றார்.

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து ஐயாயிரத்து 12 ஆகும்.

தற்போது இந்த மாணவர்களுக்கு அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

வவுனியா, மட்டக்களப்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களில் மூன்று பிரதேச அலுகலங்கள் ஸ்தாபிக்கப்படும் என்றும் ஆட்பதிவுத் திணைக்களம் மற்றும் திணைக்களத்தின் செயற்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் ஹர்ஷ இலுப்பிட்டிய மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி இத்தாலி பயணமானார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் இத்தாலிக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

சர்வதேச மாநாடொன்றில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு செல்வதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

புகையிரதத்தில் பிச்சை எடுத்தவர்கள் கைது

புகையிரதத்திற்குள் அனுமதி இன்றி பிச்சை எடுத்த மற்றும் வியாபாரம் செய்த 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரத்தில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக புகையிரத திணைக்களம் கூறியுள்ளது.

புகையிரத கட்டளைச் சட்டத்தின் கீழ் பயணிகளை அசௌகரியப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய உள்ளதாக அந்த திணைக்கம் கூறியுள்ளது.

புகையிரத்திற்குள்ளும் புகையிரத நிலையங்களிலும் அனுமதி இன்றி பிச்சை எடுத்தல் மற்றும் வியாபாரம் செய்வது ஜூலை மாதம் 01ம் திகதி முதல் தடை செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற முறைப்பாடுகளை 0112 33 66 14 என்ற இலக்கத்தின் ஊடாக புகையிரத பாதுகாப்பு பிரிவுக்கு அறிவிக்கலாம் என்று புகையிரத திணைக்களம் கூறியுள்ளது.

Comments (0)
Add Comment