பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (18.07.2018)

யுத்தத்தில் வெற்றிகொள்ள தமிழ் மக்களின் ஒத்துழைப்பு நேரடியாக இருந்தது

யுத்த வெற்றியை அடைவதற்காக தமிழ் மக்களின் ஒத்துழைப்பு நேரடியாகவே இருந்ததாக எல்லே குணவன்ச தேரர் கூறியுள்ளார்.

யுத்தத்தை முடித்துக் கொள்வது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது என்று அவர் கூறியுள்ளார்.

விஜயகலா மகேஷ்வரின் அண்மைய உரை தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயங்களை கூறியுள்ளார்.

புகையிரத சேவையில் தாமதம்

அம்பேபுஸ்ஸ புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதம் ஒன்றில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக பிரதான பாதையின் புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது.

பதுளையில் இருந்து வரும் இரவு நேர தபால் புகையிரதத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறின் காரணமாக இவ்வாறு புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது.

இதனால் பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணிக்கும் அனைத்து புகையிரதங்களும் தாமதமாக பயணிப்பதாகவும் புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது.

இன்று காலை முதல் இவ்வாறு புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டு வந்ததாகவும் புகையிரத கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவிக்கின்றது.

எவ்வாறாயினும் காலை 9 மணியாகும் போது பிரதான வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சோளக்காட்டு பொலிஸ் பொம்மைகள் வீதியோரங்களில் நிற்கின்றன

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதிகளின் ஓரங்களில், போக்குவரத்து பொலிஸார் போன்று, சோளக்காட்டுப் பொம்மைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

வீதி விபத்துகளை தடுக்கும் நோக்கிலேயே இவ்வாறான பொம்மைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனவென புத்தளம் பொலிஸ், போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது.

வீதி விபத்துகள் அதிகளவில் ஏற்படக்கூடிய பிரதேசங்களிலேயே இவ்வாறான சோளக்காட்டு பொம்மைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

திகாம்பத்தன விபத்தில் ஒருவர் பலி

தம்புள்ள-ஹபரணை பிரதான வீதியில் திகாம்பத்தன கடற்படை முகாமுக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார். அத்துடன், இந்த சம்பவத்தில் மேலுமிருவர் படுகாயமடைந்தனர்.

லொறியொன்றும், கெப்ரக வாகனமொன்றுமே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தம்புள்ள ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, சீகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றுமாலை இடம்பெற்ற இந்த விபத்துதொடர்பில், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும், 49 வயதான திஸ்ஸங்க பண்டார என்பவரே பலியாகியுள்ளாரென அடையாளம் காணப்பட்டுள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.

Comments (0)
Add Comment