பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (19.07.2018)

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மூவருக்கு உடனடி இடமாற்றம்..!!

தேவையின் அவசியம் கருதி உடனடி அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மூவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபரின் பரிந்துபை்படி பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

அதன்படி தலதா மாளிகயைின் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.டி.பி ஹலங்கொட பொல்பித்திகம பொலிஸச நிலையத்திற்கும், புலஸ்திகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஐ.டப்ளியூ பண்டார தலதா மாளிகயைின் பொலிஸ் நிலையத்திற்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.

மல்லாவி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம்.எஸ். ராஜநாயக களனி பொலிஸ் வலயத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

இலஞ்சம் பெற்றுக் கொண்ட பிரதேச செயலாளருக்கு 5 ஆண்டு சிறை..!!

இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றத்திற்காக அக்குரனை பிரதேச செயலாளருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 05 ஆண்டு சிறைத் தண்டணை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு 50,000 ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்டதற்காகவே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் கூறுகின்றார்.

புகையிரத சேவை இன்று மாலை வழமைக்கு திரும்பலாம்..!!

மலைநாட்டு புகையிரத சேவை இன்று மாலை வழமைக்கு திரும்பும் என்று புகையிரத திணைக்களம் கூறியுள்ளது.

நேற்று இரவு பேராதனை மற்றும் பிலிமதலாவ பிரதேசங்களுக்கு இடையிலான புகையிரத மார்க்கத்தில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால் தெலி் இருந்த எரிபொருள் தாங்கிய பெட்டி ஒன்று கவிழ்ந்துள்ளது.

எருபொருள் தங்கிய பெட்டியை புகையிரத தண்டவாளத்துடன் இணைப்பதற்காக கொழும்பில் இருந்து இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன், இன்று மாலையாகும் போது புகையிரத சேவை வழமைக்கு திரும்பலாம் என்று புகையிரத மேலதிக பொது முகாமையாளர் விஜய சமரசிங்க கூறினார்.

புகையிரதம் தடம்புரண்ட காரணத்தால் இன்று காலை கொழும்பில் இருந்து பதுளை வரை பயணிக்க இருந்த பொடி மெனிக்கே புகையிரத சேவையையும் இரத்து செய்ததாக அவர் கூறினார்.

பொன்சேகாவுக்கு பயம் இல்லை..!!

அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு தான் பயம் இல்லை என, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மேர்வின் சில்வா போன்று தான் அரசியல் செய்யவில்லை என, ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் சரத் பொன்சேகா நேற்று (18) தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலே​யே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

நான் களணியில் இருந்து சென்றுவிட்டதாக கருத வேண்டாம். களனியில் தான் இருக்கிறேன். முன்னர் களனி விகாரைக்கு வந்தபோது நடந்தவை ஞாபகம் இருக்கிறதா? குதிக்க வேண்டாம் இன்னும் கூறுவதற்கு பல விடயம் இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Comments (0)
Add Comment