பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (20.07.2018)

இலங்கை முதலில் துடுப்பாட்டம்

இலங்கை மற்றும் தென்ஆப்பிரிக்காவுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று இடம்பெறுகின்றது.

அதன்படி இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

காலியில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 278 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இலங்கை அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றமை கூறத்தக்கது.

ஜனாதிபதி நாடு திரும்பினார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் இத்தாலி மற்றும் ஜோர்ஜிய நாடுகளுக்கான விஜயத்தை நிறைவு செய்துகொண்டு இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.

அவர்கள் இன்று காலை 9.45 மணியளவில் கட்டார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான கியூ.ஆர். 664 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் கடந்த 14ம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

அலுகோசு பதவிக்கு 8 விண்ணப்பங்கள்

வெற்றிடம் காணப்படும் அலுகோசு பதவிக்கு தம்மை இணைத்துக்கொள்ளுமாறு தெரிவித்து, 8 பேர் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர் என, சிறைச்சாலைகள் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அலுகோசு பதவி வெற்றிடத்துக்கு ஆட்களை சேர்த்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 27 ஆம் திகதி வெளியிடப்படவுள்ள நிலையிலேயே, இவர்கள் அதற்கு முன்னதாக தங்களது விண்ணப்பங்களை சமர்பித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பித்துள்ள 8 பேரும் ஆண்கள் எனவும், இவர்களில் மூவர் க.பொ.த சாதாரண தரம் வரை கல்வி கற்காதவர்கள எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments (0)
Add Comment