பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (20.07.2018)

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு இன்று நீர் வெட்டு

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு இன்று (20) 09 மணி நேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது.

அதன்படி இன்று இரவு 9.00 மணி முதல் இவ்வாறு நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என்று அந்த சபை தெரிவித்துள்ளது.

களனி பாலத்தில் இருந்து தெமட்டகொட வரையான பேஸ்லைன் வீதி பகுதி மற்றும் புறக்கோட்டையின் கடற்கரை வீதி மற்றும் கொழும்பு 13, 14, 15 ஆகிய பகுதிகளில் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது.

3400 மல­சல கூடங்­களை அமைக்க இந்­தியா உதவி

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்திலுள்ள மக்­களின் சுகா­தார நலனைக் கருத்தில் கொண்டு இந்­திய அர­சாங்­கத்­தால் மூவா­யி­ரத்து நானூறு மல­ச­ல­கூ­டங்கள் அமைப்­ப­தற்­கான ஒப்­பந்தம் நேற்று இந்­திய உயர்ஸ்­தா­னிகர் காரி­யா­ல­யத்தில் கைச்சாத்திடப்பட்டது.

இது குறித்து கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்தியாவும் இலங்கையும் ஒரு சுகாதாரத்துறை செயற்றிட்டத்திற்கான ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை நேற்று கைச்சாத்திட்டன. இந்த உடன்படிக்கையின் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்­திய நாட்டின் 300 மில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கீட்டில் 3400 கழிவறைகள் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரண்ஜித்சிங் சந்து, மீன்பிடி நீரியல் வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரேணுக்கா ஏக்கநாயக்க ஆகியோர் கைச்சாத்திட்டனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹெரோய்ன் வைத்திருந்த பொலிஸ் அதிகாரி கைது

வெலிமட நகரில் ஹெரோய்ன் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் அதிகாரி ஒருவர் இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 3780 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிமட-மீரகஹாவத்த கொஸ்கஹாஅராவ பகுதியைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அமீத் வீரசிங்கவின் விளக்கமறியல் நீடிப்பு

கண்டியில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, மஹாசோன் அமைப்பின் தலைவர் அமீத் வீரசிங்க உள்ளிட்ட 8 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இவர்கள் அடுத்த மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்றைய தினம் (20), தெல்தெனிய நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment