பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (21.07.2018)

தயான் ஜெயதிலகவின் நியமனம் இடைநிறுத்தம்

ரஸ்யாவிற்கான தூதுவராக தயான் ஜெயதிலகவை நியமிப்பதை உயர் பதவிகள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு இடைநிறுத்தியுள்ளது.

தயானின் நியமனத்திற்கு எதிராக பல முறைப்பாடுகளை சமர்ப்பித்துள்ளதை தொடர்ந்தே தெரிவுக்குழு இந்த நியமனத்தை இடைநிறுத்தியுள்ளது.

தயான் ஜயதிலகவின் நியமனத்திற்கு எதிராக 15 சிவில் அமைப்புகள் முறைப்பாடுகளை தாக்கல் செய்துள்ளன என ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னர் தூதுவராகயிருந்தவேளை தயான் ஜெயதிலக எடுத்த சர்ச்சைக்குரிய முடிவுகள் தொடர்பில் ஆராய்வதற்கும் நாடாளுமன் தெரிவுகுழு தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில் அவரின் நியமனம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நோர்வே இராச்சியத்திற்கான தூதுவராக பேராசிரியர் அரூஷா குரே நியமனம்!!!

பேராசிரியர் அரூஷா குரே நோர்வே இராச்சியத்திற்கான புதிய இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளியல் துறையில் சிறப்புத்தேர்ச்சியைடந்த பேராசிரியர் அரூஷா வெகு விரைவில் நோர்வே இராச்சியத்திற்கான இலங்கை தூதுவராக தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

மியன்மார் குடியரசிற்கான தூதுவராக நந்திமித்ர ஏகநாயக நியமனம்!!!

அமைச்சரவை மந்திரியாகவும், மாகாண முதலமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் சேவையாற்றிய நந்திமித்ர ஏகநாயக மியன்மார் குடியரசிற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நந்திமித்ர ஏகநாயக தனது கடமைகளை நேற்று பொறுப்பேற்றார்.

“வளங்களை இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் கொடுத்துவிட்டு சீனாவிடம் கையேந்தும் அரசு”

நாட்டின் தேசிய வளங்களை அமெரிக்க இந்திய உள்ளிட்ட நாடுகளுக்கு கொடுத்துவிட்டு எமது நாடு சீனாவிடம் கையேந்திக் கொண்டிருக்கின்றது. மத்தள விமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலையம் என்பவற்றை அரசு இந்தியாவிற்கு விற்பனை செய்துள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இம் மூன்று வருடங்களில் எமது நாட்டு வளங்களை வெளிநாடுகளுக்கும் தனியார் கம்பனிகளுக்கும் விற்பனை செய்ததே இந்த அரசாங்கத்தின் சாதனையாகும். நாட்டின் பெரும்பாலான தேசிய வளங்களை விற்பனை செய்து முடித்து விட்டார்கள். இனி விற்பனை செய்வதற்கு எதுவும் இல்லை என தெரிவித்த லங்கா சமசமாஜ கட்சி தலைவர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண,

நல்லாட்சி அரசாங்கம் எஞ்சியிருக்கும் ஒன்றரை வருட ஆட்சி காலத்தில் முழு இலங்கையை வெளிநாடுகளுக்கு தாரை வார்த்து விடும். இந்த அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் உள்நாட்டு பிரஜைகளின் சுதந்திரத்திற்கும் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படலாம். சர்வதேச போக்குவரத்துடன் தொடர்புடைய வளங்கள் விற்கப்பட்டுள்ளன. இதனால் எதிர்வரும் காலங்களில் எமது நாட்டு யார் வேண்டும், யார் வரக் கூடாது என்பதையும் இலங்கையர்கள் எங்கு செல்ல வேண்டும், செல்லக் கூடாது என்பதையும் வெளிநாடுகளே தீர்மானிக்க வேண்டிய நிலைக்கு இலங்கை உள்ளாகலாம்.

எனவே இவ்வாறு தொடர்ச்சியாக தேசிய வளங்கள் விற்கப்படுகின்றமையை அனுமதிக்க முடியாது. இது தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்தப்பட வேண்டும். இவ்வாறான விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே அடுத்த கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுப்பதற்கும் தீர்மானித்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.

Comments (0)
Add Comment