பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (22.07.2018)

கடலில் மூழ்கி சிறுமிகள் பலி..!!

களுத்துறை கடலுக்கு நீராடச் சென்ற 11 வயதுடைய சிறுமிகள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை களிடோ கடற்பகுதிக்கு நீராட சென்ற போதே குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் கைது

பல குற்றச்செயல்களுடன் தொடர்பு கொண்ட ரத்தா எனப்படும் டெலன் ஹசன் குமார என்பவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 32 வயதுடைய டிலான் குமார என்பவரிடமிருந்து ஹெரோயின் போதைப் பொருள் உட்பட கைக்குண்டும் மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் இருக்க வேலைத்திட்டங்கள்

20 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் இருக்க வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அஸ்கிரி விகாராதிபதியை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் இருப்பதும் ஜனாதிபதியை தெரிவு செய்யும் உரிமையை மக்களிடம் வழங்காமல் இருப்பதுமே 20 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் நோக்கம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியை தெரிவு செய்யும் உரிமை பாராளுமன்றத்திடம் வழங்கப்பட்டு அதிக வாக்குகள் பெறப்படுபவரே ஜனாதிபதியான நியமிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment