பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (26.07.2018)

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப் புள்ளிகள் இவ்வார இறுதியில்..!!

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப் புள்ளிகள் இவ்வார இறுதியில் வெளியிடப்படும் என்று பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த வெட்டுப் புள்ளிகள் 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட இருக்கின்றன.

பல்கலைக்கழக நுழைவுக்கான 50 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன என்று பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்முறை பல்கலைக்கழங்களுக்கு 25 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

மஹிந்தோதய என்பது மஹிந்த இல்லை

காலி மைதானத்தின் விளையாட்டரங்கில் உள்ள தனது பெயரை அகற்றுவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹோமாகம பகுதியில் வைத்து இன்று (25) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மஹிந்தோதய என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட ஆய்வகத்தின் பெயரும் அகற்றப்பட்டுள்ளதுடன் மஹிந்தோதய என்பது மஹிந்த இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நெருக்கடிகளுக்கு தீர்வுகாண புதிய அரசியல் யாப்பு அவசியம்

நாட்டின் நெருக்கடிகளுக்கு தீர்வுகாண அரசியல் அமைப்பு திருத்தம் அல்லது புதிய அரசியல் யாப்பு அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார்.

சிறுபான்மையினருக்கும், ஏனைய இனத்தவர்களுக்கும், சகல மதங்களுக்கும் உரிய உரிமைகளை உறுதிப்படுத்துவது அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு இனத்தை மற்றுமொரு இனம் கடந்து சென்று தமது அடையாளங்களை உறுதிப்படுத்த முயற்சிப்பதன் காரணமாகவே உலகில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

முரண்பாடுகளைத் தீர்க்க வேண்டுமானால் நாட்டில் வாழும் அனைவருடைய பன்மைத்துவ அம்சங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 10 ஆவது தேசிய மதங்களுக்கு இடையிலான மாநாட்டில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

Comments (0)
Add Comment