பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (27.07.2018)

மின்சாரத் தடை நாளை வரையில் ஒத்திவைப்பு

கொழும்பின் பல்வேறு பகுதிகளில் இன்று அமுல்படுத்தப்பட இருந்த மின்சாரத்தடை நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.

அதனைடிப்படையில் நாளை (28) 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இவ்வாறு மின்சாரத் தடை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது​.

கொழும்பு 03, 04, 05, 07 மற்றும் 08 ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு மின்சாரத் தடை விதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

132 கிகா வெட் மின் கட்டமைப்பில் அவசர திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், இந்த மின்சாரத் தடை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் ஒருவர் பலி

அநுராபுரம், ஹதருஸ்வல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று முச்சக்கர வண்டுயுடன் மோதி பின்னர் லொறி ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த நபர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பதவி, ஶ்ரீபுர பகுதியை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் முச்சக்கர வண்டி மற்றும் லொறியின் ஓட்டுனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசபரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசியல் தலைவர்கள் தான் இனவாதத்தை உருவாக்கியது

இலங்கையினுல் இனவாதத்தை உருவாக்கியது மக்கள் இல்லை, அரசியல் தலைவர்கள் தான் என சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று (26) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசியல் பலத்தை பெற்றுக்கொள்வதற்காக எந்தவொரு கீழ் தனமான வேலையை செய்தாவது ஆட்சியை பிடிப்பதற்கு இவ்வாறு இனவாதம் தூண்டிவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புலிகளுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் தமிழ் மக்களுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது எனவும் இவ்வாறான மனநிலை இருந்தால், பிரச்சினைகளைத் தீர்த்த முன்னோக்கி செல்லக்கூடிய சூழ்நிலை முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து ஊழியர்கள்

சிலாபம் – கொழும்பு தனியார் பேருந்து ஊழியர்கள் இன்று (27) வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

சிலாபம் – கொழும்பு பேருந்தின் ஓட்டுனர் ஒருவருக்கு கொழும்பில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சமபவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக சிலாபம் – கொழும்பு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சமிந்த ஹங்ச தெரிவித்துள்ளார்.

நேற்று (26) இரவு 11 மணியளவில் கொழும்பில் வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், யாழ்ப்பாணம் – கொழும்பு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் முகாமையாளர் மற்றும் ஓட்டுனர் ஒருவர் உட்பட தன்னை தாக்குவதற்காக வந்ததாகவும் தாக்குதலுக்கு இலக்கான ஓட்டுனர் தெரிவிக்கின்றார்.

தாக்கதலும் உள்ளான ஓட்டுனர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மருதானை பொலிஸ் நிலையத்தில் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் உடனடியாக தீர்வு ஒன்றை வழங்காவிடின் சிலாபத்தில் இருந்து பயணிக்கு அனைத்து பேருந்துகளும் போராட்டத்தில் ஈடுபடும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments (0)
Add Comment