பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (28.07.2018)

நாட்டின் வளங்களை பாதுகாக்கும் தேவை அரசாங்கத்திற்கு இல்லை..!!

தற்போதைய அரசாங்கம் நாட்டின் அனைத்து வளங்களையும் வௌிநாடுகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

நாட்டின் வளங்களை பாதுகாக்கும் தேவை தற்போதைய அரசாங்கத்திற்கு இல்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே நாமல் ராஜபக்ஷ இதனைக் கூறினார்.

பிரதமரின் வருகையை புறக்கணிக்கிறது ஏறாவூர் நகரசபை..!!

நாளை பிரதமர் ரணில் விக்ரம சிங்கவின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள மட்டக்களப்பு- ஏறாவூர் பிரதேச செயலகக் கட்டடத் திறப்புவிழா நிகழ்வில் ஏறாவூர் நகர சபையின் முதல்வர் உட்பட ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் கலந்துகொள்ளாது புறக்கணிக்கத் தீர்மானித்தள்ளதாக நகர முதல்வர் ஐ.அப்துல் வாசித் தெரிவித்தார்.

இதேவேளை பிரதமரின் வருகையினை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் எவ்வித பணிகளிலும் நகர சபை ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துவதில்லையென்றும் முடிவுசெய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இக்கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வருகை தரவுள்ள நிகழ்விற்கான அழைப்பிதழில் ஏறாவூர் நகர சபை முதல்வரின் பெயர் உள்வாங்கப்படாதுள்ளமை குறித்து உறுப்பினர்கள் கண்டனம் வெளியிட்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நிருவாகத்தின்கீழ் இயங்கும் பிரதேசத்திற்கு அக்கட்சியின் தலைவர் வருகை தரவுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றபோதிலும் அதே கட்சியின் உள்ளுராட்சிமன்றத் தலைவரது பெயர் அழைப்பிதழில் திட்டமிட்டுப்புறக்கணிக்கப்பட்டுள்ளமை வேதனை தருவதாக உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

குறிப்பாக ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் இங்குள்ள அரசியல்வாதியொருவரது கையாளாக செயற்படுவதனால் நகர சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் பல இடங்களில் புறக்கணிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டது.

வத்தளையில் தீ!!!

வத்தளை – கெரவலப்பிடிய, அரவகொடுவ பகுதியில் அமைந்துள்ள இரசாயன தொழிற்சாலையொன்றில் திடீரென தீ பரவியுள்ளது.

திடீரென பரவிய தீயை கட்டப்படுத்துவதற்கு 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தீ பரவலுக்கான காரணம் இது வரையில் வெளிவராத நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments (0)
Add Comment