பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (31.07.2018)

சுற்றுலாத் துறையை முன்னேற்றுவதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்

சுற்றுலாத் துறையை முன்னேற்றுவதன் மூலம் நாட்டினுள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசு அதற்கான உரிய நடவடிக்கை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“டுக் டுக்” முச்சக்கரவண்டி திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று (30) கொழும்பு, காலி முகத்திடலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

அனைத்து அரச பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 3ம் திகதி விடுமுறை

தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான அனைத்து அரச பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஆகஸ்ட்ட மாதம் 03ம் திகதி முதல் விடுமுறை வழங்கப்படும் என்று கல்வியமைச்சு கூறியுள்ளது.

அதன்படி அந்தப் பாடசாலைகள் அனைத்தும் மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 03ம் திகதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை நடைபெற உள்ள உயர் தரப் பரீட்ரைசகளுக்காக நடத்தப்படுகின்ற பிரத்தியேக வகுப்புக்கள் மற்றும் கையடுகளை அச்சிடுதல், மாதிரி வினாத்தாள்களை விநியோகித்தல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளுக்கும் இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உடுவே தம்மாலோக தேரரின் வௌிநாட்டுப் பயணத் தடை நீக்கம்

உடுவே தம்மாலோக தேரருக்கு வௌிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கிக் கொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் செப்டம்பர் 10ம் திகதி வரையில் இந்த தடை விலக்கிக் கொள்ளப்படுவதாக கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை

பியகம சுதந்திர வர்த்தக வலயத்துக்கு நீர் விநியோகிக்கும் குழாயில் இடம்பெறும் திருத்தப் பணிகள் காரணமாக, பியகம வடக்கு மற்றும் அதனை அண்மித்த சில பிரதேசங்களில் நீர் விநியோகம் 15 மணித்தியாலங்களுக்கு தடைப்படுமென நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதன்படி இன்று (31) காலை 9 மணி தொடக்கம் இரவு 12 மணிவரை நீர்​ விநியோகம் தடைப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment