பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (01.08.2018)

கொழும்பிலேயே அதிக ​போதை விற்பனை

இலங்கையில் அதிகமாக போதை விற்பனை இடம்பெறுவது கொழும்பு 1- 15 வரையான பிரதேசங்களிலேயே என அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அத்துடன், கம்பஹா மாவட்டம் இரண்டாமிடத்திலும், குருநாகல் மாவட்டம் மூன்றாமிடத்திலும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டுக்குள் 50,000 இற்கு அதிகமானோர் போதைக்கு அடிமையாகியுள்ளனரெனவும், இவர்களால் வருடாந்தம் 1000 கிலோவுக்கு அதிகமாக போதைப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

போதைப் பொருளை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும், புதிதாக நாட்டுக்குள் கொண்டு வரப்படும் போதைப் பொருட்கள் குறித்து பொலிஸாரைத் தெளிவுப்படுத்தி சட்டத்தை கடுமையாக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் எரிபொருள் ஆய்வு; கேள்வி மனுக்களைக் கோர அனுமதி

உள்ளூர் வளங்கள் மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய எரிபொருள் மற்றும் எரிவாயு சக்திகளை பயன்படுத்துவதன் மூலம் குறிப்பிடத்தக்க பொருளாதார நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

எரிபொருள் இருப்பதாக நம்பப்படும் மன்னார் கடல் பிரதேசத்தில் எரிபொருள் நிறுவனம் மற்றும் புவியியல் விஞ்ஞானவியலாளர்களின் கூடிய ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இதற்கமைவாக பிரதேசத்தில் எரிபொருள் இருப்பதாக எதிர்பார்க்கப்படும் பிரதேசங்களில் எரிபொருள் ஆய்வு, அபிவிருத்தி மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளுக்கான சர்வதேச எரிபொருள் நிறுவனங்களிடமிருந்து கேள்வி மனுக்களை கோருவதற்காக கனியவள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இருதய பாதிப்பால் உயிரிழப்பதை தடுக்கும் மருந்துஊசி இறக்குமதிக்கு அனுமதி

இருதய பாதிப்பு ஏற்படுவோர் உயிரிழப்பதை தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் டெனேக்டிப்ளெஸ் (tenecteplase) மருந்துஊசி 13,000ஐ கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதறகென அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்வனவு குழுவின் சிபார்சுக்கு அமைய இந்திய நிறுவனம் ஒன்றுக்கு 5.525 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குதவற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்த சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இருதய பாதிப்பால் உயிரிழப்பதை தடுக்கும் மருந்துஊசி இறக்குமதிக்கு அனுமதி

இருதய பாதிப்பு ஏற்படுவோர் உயிரிழப்பதை தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் டெனேக்டிப்ளெஸ் (tenecteplase) மருந்துஊசி 13,000ஐ கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதறகென அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்வனவு குழுவின் சிபார்சுக்கு அமைய இந்திய நிறுவனம் ஒன்றுக்கு 5.525 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குதவற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்த சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

தேனீ வளர்ப்பு தொழிற்றுறையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

இலாபகரமான தொழிற்துறையாக கருதப்படும் தேனீ வளர்ப்பை மேற்படுத்துவதற்காக பாரிய வளத்தை இலங்கை கொண்டுள்ளபோதிலுதம் தேனீ வளர்ப்பு தொடர்பாக விஞ்ஞான அறிவு இல்லாததினால் தற்பொழுது இலங்கையில் தேனீ வளர்ப்பு தொழில் துறை அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

இதனால் தேனீ வளர்ப்பு தொழிற்றுறையை குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றது. அத்தோடு உள்ள+ர்த் தேவையை பூர்த்தி செய்வதற்காக தேன் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த விடயங்களை கவனத்திற்கொண்டு தேனீ வளர்ப்பு தொழிற்துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இரண்டு இலட்சம் தேனீ அலகுகளை முதல் கட்டத்தின் கீழ் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் கீழ் 1,000 விவசாயிகள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு இவர்களுக்கு தேனீ வளர்ப்புக்கான பெட்டிகளும் விநியோகிக்கப்பட்டுள்ளன. தேனீ வளர்ப்பு தொழிற்துறையை மேலும் விரிவுபடுத்துவதற்காக சுமார் 2 இலட்சம் பேருக்கு புதிய தொழில்வாய்ப்புக்கள் ஏற்படுத்துவதற்கும் வருமான வழிகளை எற்படுத்தும் நோக்கிலும் நவீன பயிற்சி மற்றும் ஆய்வு மத்திய நிலையம் தம்பேதென்ன கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைக்கப்படவுள்ளது.

இதற்காக சமூக சேமநல மற்றும் ஆரம்ப கைத்தொழிற்துறை அமைச்சர் தயா கமகே சமர்ப்பித்த பரிந்துரையுடன் இதற்கான திட்டத்தை விவசாய அமைச்சினதும் சமூக சேமநல மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சின் கூட்டுத் திட்டமாக நடைமுறைபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Comments (0)
Add Comment