பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (02.08.2018)

அரச வைத்திய அதிகாரிகள் நாளை வேலை நிறுத்தம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ள பரந்தளவிலான வேலை நிறுத்தம் நாளை 08.00 மணி முதல் ஆரம்பமாகும் என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் உடன்படிக்கை உள்ளிட்ட தாம் முன்வைத்த பிரச்சினைகள் சம்பந்தமாக அரசாங்கம் நியாயமான தலையீடு செய்யாமைக்கு எதிராகவே இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

அந்த சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே இதனைக் கூறினார்.

சயிட்டம் நெருக்கடியை போன்றே சிங்கப்பூர் உடன்படிக்கையையும் கொண்டு செல்வதுதான் அரசாங்கத்தின் தேவையா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அரசு தேர்தலை முகங்கொடுக்க வெறுப்பை தெரிவிக்கிறது

தற்போதைய அரசு தேர்தலை முகங்கொடுக்க வெறுப்பை தெரிவிப்பதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

இன்று (02) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சோமசிங்க, இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் தேர்தலை முகங்கொடுப்பதற்கு எவ்வித தயார் நிலையிலும் இல்லை எனவும் அரசாங்கம் சர்வாதிகார முறையில் நாட்டை ஆளுவதற்கு முயற்சி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று சிறிய கார் கனவு, உண்மையில் ஒரு கனவாகவே மாறியுள்ளதாகவும் தற்போதைய அரசாங்கம் இளைஞர்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளைஙயும் மீறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு கடன் முகாமைத்துவம் தொடர்பில் எவ்வித அறிவும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முறை சம்பந்தமாக அரசியல் கட்சிகளிடையே இணக்கம் இல்லை

மாகாண சபைத் தேர்தல் எந்த முறையில் நடத்தப்பட வேண்டும் என்பது சம்பந்தமாக அரசியல் கட்சிகளிடையே இணக்கப்பாடு இல்லை என்று பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி கூறியுள்ளார்.

இன்று (02) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

​தேர்தல் முறை சம்பந்தமாக அறிந்து கொண்டு முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து அவதானம் செலுத்தி யோசனைகள் அடங்கிய அறிக்கையை அமைச்சர் கேட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

தேர்தலை பிற்போடுவது சம்பந்தமாக தமது அறிக்கையில் இல்லை என்றும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள முறையில் தேர்தலை நடத்த முடியும் என்று எதிர்பார்ப்பதாகவும் ரோஹண ஹெட்டியாரச்சி கூறியுள்ளார்.

இன்று கைது செய்யப்பட்ட PTL நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் இருவருக்கும் பிணை

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதான முகவர் நுவன் சல்காடு மற்றும் அந்த நிறுவனத்தின் முன்னாள் தொழில்நுட்ப அதிகாரி சசித்ர தேவதந்திரி ஆகிய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் இன்று குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் நீதிமன்றத்தால் இருவரும் வௌிநாடு செல்வதற்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தொலைபேசி உரையாடல்களை அழித்தமை மற்றும் திரிவுபடுத்திய குற்றச்சாட்டிலேயே இவர்கள் இருவரும் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அலோசியஸ் மற்றும் கசுன் மீண்டும் விளக்கமறியலில்

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இருவரையும் எதிர்வரும் 09ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment