பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (03.08.2018)

போதைப் பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் வைத்து போதைப் பொருளுடன் ஒருவர் பொலிஸ் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

30 வயதுடைய இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 878 கிராம் நிறையுடைய ஐஸ் வகை போதைப் பொருளின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தையில் தரமற்ற நிறமூட்டப்பட்ட பருப்பு வகைகள்

நிறமூட்டப்பட்ட, தரமில்லாத பருப்பு வகைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் பல இடங்களில் இவ்வாறான தரமற்ற நிறமூட்டப்பட்ட பருப்புவகைள் விற்பனை செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளது.

இந்த பருப்பை கழுவும் போது நீர் சிவப்பு நிறமாக மாறும். இந்த பருப்பு மிகவும் சிறியதாகும்.

பருப்பை வேகவைக்க வழமையை விட கூடுதலான நேரம் எடுக்கும் என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது பற்றி மக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். இவ்வாறான பருப்பு வகைகள் தொடர்பாக பிரதேசத்தில் உள்ளபொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு முறைப்பாடு செய்வது அவசியமாகும்.

தினேஷ் குணவர்தனவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி?

பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குமாறு கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் விடுத்துள்ள கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவின் நிலைப்பாட்டை அறிய தருமாறு கோரி, சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று (02) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், கூட்டு எதிர்க்கட்சியில் 70 பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதால், பாராளுமன்ற குழு தலைவரான தினேஷ் குணவர்தனவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் எனக் கோரி, 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ஜூலை 30 ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கடிதம் ஒன்றை கையளித்தனர்.

தடை விதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுயாதீன உறுப்பினர் பட்டியலில்

இலங்கை அரசாங்கத்தின் செலவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை சம்பந்தமான தகவல்களை வௌியிடாமையால் விசாரணைகளை எதிர்கொண்டுள்ள பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர் இயன் பைஸ்லி, சுயாதீன உறுப்பினராக பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

இந்த விஜயத்தின் மூலம் பிரித்தானிய பாராளுமன்றின் வெஸ்ட் மினிஸ்டர் ஒழுங்கு விதிகளை மீறி செயற்பட்டமை உறுதியானதால் 30 நாட்களுக்கு பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அவரது பெயர் டீ.யூ.பி கட்சியின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு சுயாதீன உறுப்பினர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டதால் அவரை கட்சியில் இருந்து நீக்கியதாக கருத்தில்லை என்று கீழ்மட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் பேச்சாளர் கூறியுள்ளார்.

அந்தக் கட்சியிடம் விசாரிக்காமல் கட்சியிலிருந்து நீக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வௌியிட்டுள்ள டீ.யூ.பி கட்சியின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் இயன் பைஸ்லி மீதான விசாரணை தொடர்ந்து இடம்பெறுவதாக கூறியுள்ளார்.

2013 ஆம் ஆண்டு இயன் பைஸ்லி, தனது குடும்பத்தினருடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன் இந்த விஜயத்துக்கான முழுச் செலலையும் இலங்கை அரசாங்கம் ஏற்றிருந்தது.

Comments (0)
Add Comment