பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (04.08.2018)

தெரண தருவோ நிகழ்ச்சி திட்டத்தில் 46 மாணவர்களுக்கு கௌரவம்

சிறுநீரக பாதிப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகளுக்கு உதவும் “தெரண தருவோ” திட்டத்தின் மற்றுமொரு நிகழ்வு இன்று (03) நடைபெற்றது.

கடந்த ஆண்டு நடைபெற்ற சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட 46 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வே இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாணவ, மாணவிகளுக்கு உயர்தரம் கல்வி கற்பதற்கு தேவையான பல உதவிகள் செய்யப்பட்டன.

DSI நிறுவனம் மாணவ, மாணவிகளுக்கு அன்பளிப்புக்களை வழங்கியிருந்தன.

இதற்கு மேலதிகமாக மாணவர்களின் மனவளத்தை மேம்படுத்தும் பயிற்சி ஒன்று ஆலோசகர் ரொகான் டயஸினால் முன்னெடுக்கப்பட்டது.

அமெரிக்க அரசியல் கட்சி பணிப்பாளர் – அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு

அமெரிக்க தேசிய ஜனநாயக நிறுவனத்தின் அரசியல் கட்சி நிகழ்ச்சிகளின் பணிப்பாளர் அய்வன் டோஹெர்டி நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் அமைச்சர் ஹக்கீமை சந்தித்தார்.

அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

இலங்கையின் சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் அமெரிக்க பிரதிநிதிகள் அமைச்சருடன் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.

கொள்கை வட்டி வீதங்களை அதே மட்டங்களில் பேண தீர்மானம்

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்தது.

இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி இன்று (03 வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக் கூட்டத்தில் கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது.

இலங்கையின் உண்மைப் பொருளாதார வளர்ச்சியானது ஆண்டின் இரண்டாம் காலாண்டிலிருந்து படிப்படியான அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Comments (0)
Add Comment